வருந்தாதே வருத்திப்பழகு…

வருந்தாதே
வருத்திப்பழகு…..!


மலையோடு பேசு
நதியோடு நட
ஓடைநீரில் முகம்பார்
கலங்காத தண்ணீரில் கால்பதி..

குடை சுருக்கி
மழைத் துளியில்
குளித்துப் பழகு….

மழை ஓய்ந்தபின்
காகித கப்பலை
நதிவீதியில் ஒடவிட்டு
நடந்து பழகு…!

இளைத்த நோட்டு
களைத்த விரல்கள்
கனத்த இதயம்…
காரணம் தேடு…..!

திருந்த மறுக்கம்
பிழைகளும்.
திருத்த நினைக்கும்
……………………
வருந்தாதே

வருத்திப்பழகு…..!

எழுதியவர் : இரா.ரமேஷ் (11-Jun-21, 7:31 pm)
சேர்த்தது : இரா ரமேஷ்
பார்வை : 96

மேலே