ஆசை ஆசை

ஆசைக்கென்ன வேலி

ஆசை ஆசை
பகுதி-1

இலையின் நுனியில் தங்கிட ஆசை
இழையாய் தொங்கிடஆசை
இதழில் உறங்கிட ஆசை
ஈர விழியில் நனைந்திட ஆசை
இசைக்குள் புகுந்திட ஆசை
இமைக்குள் இருந்துவர ஆசை
அசையும் காற்றினுள் ஆடிவர ஆசை
இருட்டில் விழித்திருக்க ஆசை

பனியின் மேல் படுத்துறங்க ஆசை
பருவ நங்கையாய் நகைத்திட ஆசை
புலியை கூண்டுக்குள் பிடித்திட ஆசை
புதைந்த மனதில் புகுந்திட ஆசை
புகைந்த உறவை பார்த்திட ஆசை
பறவையாய் பறந்திட ஆசை
சிறகில் அமர்ந்து சுற்றிவர ஆசை
சிலைக்குள் புகுந்து சிரித்துவிட ஆசை
சிற்றெரும்பாய் இனிப்பைக் கடித்திட ஆசை
சினம் கொண்ட சிங்கத்தின்
பிடரியை பிடித்திட ஆசை
சிவந்த சூரியனிடம் சொல்லிவர ஆசை.

முதுகை பார்த்திட ஆசை
முதுமையை மறந்திட ஆசை.
முள்ளுக்குள் நடந்திட ஆசை
முறுக்கு மீசையுடன்
முண்டாசு கட்டியே நடந்திட ஆசை
உருட்டும் விழியின் ஓரத்தில் உறங்கிட ஆசை.

வழிந்த நினைவுகளை வருட ஆசை
வந்த ஆசையில்
வழுக்கி விழுந்திட ஆசை.

மூக்கின் நுனியில் ஊக்காய்
குத்திட ஆசை.
முன் வந்த நாக்காள்
மூக்கை நக்கிவிட ஆசை
முந்தானையாய் பிறந்திட ஆசை
முன்விரல் நுனியால்
நாணத்தை வருடிட ஆசை

காற்றுடன் சுற்றிவர ஆசை
கடலில் மிதந்துவர ஆசை
கல்லுக்குள் தேரையாய் வாழ்ந்திட ஆசை
காட்டை நாட்டிற்குள் கொண்டுவர ஆசை
காசு பணம் இல்லா உலகை பார்த்துவர ஆசை
குட்டைப்பாவாடையின் குறையை கேட்டுவர ஆசை
குற்றம் காண்பவனை குத்துவாலாய் மாறி
குத்திவர ஆசை
குள்ளநரிக் கூட்டத்தைக் கூப்பிட்டு
கள்ளத்தனத்திற்கு மாநாடு நடத்த ஆசை
காட்டுப்புறாவின் கண்ணுக்கு மை தீட்டிவர ஆசை
காளையின் கொம்பை சீவிவிட ஆசை
கட்டழகை கழட்டிப்பார்க்க ஆசை
கட்டிய சேலையில் ஜிம்கியாய் தொங்கிட ஆசை
கன்னியின் கனவை பார்த்துவர ஆசை
காதலை கட்டி இழுக்க ஆசை
கவலையற்ற மனிதனாய் வாழ்ந்திட ஆசை
காச்சிய பாகாய் உருகிட ஆசை
கசியும் அன்பில் வசியம் செய்ய ஆசை
கசையின் அடியில் வலிவராத சுகத்தை தந்திட ஆசை
கட்டி உருண்டு காலைப் பொழுதை வரவேற்க ஆசை
கடிகார முற்களாய் சுற்றிவர ஆசை

மலையைத் தொட்ட முகிலாய்
முனகியே மலையின் மேல் தவழ்ந்;திட ஆசை
மல்லாக்கப்படுத்து வடிக்கும் நிலவுடன்
வாய்விட்டுப்பேசிட ஆசை

மல்லிகைப் பூவின் மணத்தை பிடித்துவர ஆசை
மாலைப்பொழுதை மடியில் கிடத்திட ஆசை
மலை உச்சிக்குச் சென்று
மனதில் பட்டதை
உறக்கக் கத்தியே பேசிட ஆசை


மேகங்களை எடுத்து
மேனியில் ஆடையாய் போற்றிட ஆசை
மோகத்தை மொண்டு
மேகத்தில் தூவிட ஆசை
மீசையைப் பிடித்து தொங்கி விளையாட ஆசை
மேசையின் மீது மீண்டும் ஏறி
விளையாட ஆசை

சேற்றைப் பூசி
சேர்ந்தே விளையாட ஆசை
சேல்கெண்டை மீனின் செதிலை
சட்டையாய் நெய்திட ஆசை

சேலைக்குள் புகுந்து
சற்றே இளைப்பாற ஆசை
சேவலை எழுப்பி
கூவிட ஆசை

அலங்காரம் இல்லாமல்
ஆபரணம் கட்ட ஆசை
அழகுப் பெண்ணிடம்
அலங்காரம் செய்து கொல்ல ஆசை

அசிங்கம் இல்லா
ஆபாசத்தை பார்த்துவர ஆசை

அசட்டுத்தனத்தை அப்பி பூசிட ஆசை
அதிகம் பேசும் வாய்க்கு பூட்டுப் போட ஆசை
அடுத்தவன் சுமையை சுமந்திட ஆசை

அடித்து வரும் வெள்ளத்தில்
அமர்ந்து ஆடிப்பாடிட ஆசை

அணைக்கும் கரங்களுக்குள்
சிலையாய் மாறிட ஆசை
அச்சம் இன்றி
மிச்ச வாழ்வை வாழ்ந்திட ஆசை
அன்னையின் வயிற்றுக்குள்
மீண்டும் உறங்கிவர ஆசை
அழுவும் கண்ணுக்கு
ஆருதல் சொல்லிவர ஆசை

ஆட்கள் இல்லா ஊரில்
அரட்டை அடித்துவர ஆசை
இளமையைப்பிடித்து
இருட்டில் அடைக்க ஆசை

படைத்தவனை பார்த்து
பசையை நிறுத்த
வரம் வாங்கி வர ஆசை

பாசை தெரியாத ஊரில்
படிப்பு கற்றுவர ஆசை

பட்டியல் போட்டு ஒவ்வொரு ஆசைகளையும் நிறைவேற்றிட ஆசை
பாட்டியின் வாய்க்கு பூட்டுப் போட்டுவர ஆசை

நகத்தின் முனியில் கிள்ளிட ஆசை
நகையாய் கழுத்தில் சுத்திட ஆசை.
புன்னகையாய்ப் பூத்திட ஆசை.

இடைக்குள் உடையாய் மாறிட ஆசை
குடையாய் விரிந்திட ஆசை

வண்ண வான வில்லை வளைத்திட ஆசை
மெல்லமெல்ல மண்ணில் உருண்டிட ஆசை.
மெய் மறந்து மண்ணில்
உறங்கிட ஆசை.

ஓடக்கரையில் ஓடிட ஆசை
ஓடும் மேகத்தின் மீது பவனிவர ஆசை

சொல்லச் சொல்ல
செல்லக் கிளியின் வாயில்
ஒளிந்து விளையாட ஆசை.

வாய்கால் வரப்பில்
நடந்து போக ஆசை
வடிந்த நீரை மிதித்து எத்தி விளையாடிப் போக ஆசை

கொட்டும் மழையில்
சொட்டியே சுற்றிட ஆசை
கட்டும் குளிரில் குளித்திட ஆசை.

குளத்து நீரில்
குதித்துத் துள்ள ஆசை.
குவலைப் பூவாய் கவலை இன்றி குளத்தில் இருந்திட ஆசை

தொடரும் அலையுடன்
தொட்டே விளையாட ஆசை.
கொட்டும் பனிக்கு
சேலை கட்டிவிட ஆசை.
தட்டும் கையில் ஓசையாய் நின்றிட ஆசை.

வண்ணத்துப் பூச்சை கையில் பிடித்து
வண்ண வண்ண வர்ணங்களை பூசிட ஆசை

பறக்கும் பறவைமேல் அமர்ந்து
பறந்து போக ஆசை.
பஞ்சுமிட்டாய் தின்றுகொண்டே
பள்ளிக்கூடம் போய்
திரும்பியும் படித்திட ஆசை
பகலை இரவாய் மாற்றிட ஆசை

புற்றீசல் புறப்பட்டுவரும் இடத்தில் குடி இருக்க ஆசை
பூக்களின் நிறங்களை பார்த்திட ஆசை.
பூமிக்களுக்குள் புகுநதுவர ஆசை.

பூக்களின் மதுவை குடித்து
பூக்களின் இதழில் படுத்துறங்க ஆசை.

வண்ண மீனாய்
வாழ்நாள் முழுவதும்
கடலில் விளையாட ஆசை.
விண்மீன்களுடன் வானில் சென்று தொங்கிவர ஆசை

தின்னை பேச்சில்
தினமும் அமர்ந்து
ஊர்வம்பு பேசிட ஆசை

திருட்டு மாங்காய்
திருடி திண்ணிட ஆசை.

சுருட்டிய பேப்பரை
சுருட்டாக வைத்து ஊத ஆசை.

களத்து மேட்டில்
காளையைபிடிக்க ஆசை.
குளத்தில் குதூகலமாய்
குதித்தே நீரில் விளையாட ஆசை
கடித்த கொசுவை
பிடித்தே கடித்திட ஆசை

தொடரும்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (11-Jun-21, 8:44 pm)
Tanglish : aasai aasai
பார்வை : 50

மேலே