தன்னம்பிக்கை

துயில் கொள்ள முடியாத நேரம் இது..
எதையாவது செய்து விட
போராடும் மனம்..
எதையும் செய்யாது நிற்கும் சோம்பல், பயம்
உன் கையில் எதும் இல்லை என
நினைத்து முடங்கி காலங்கள்
வீணாவதே மிஞ்சும்
முயன்று தோற்று போ
பல முறை முயற்சி செய்
வீழ்ச்சி தோல்வி அல்ல,
அனுபவத்தின் ஆரம்பம்
இளைஞனே போராடும்
காலங்களை விட்டு விடாதே
உன்னை மட்டும் நீ நம்பி வாழ
பழகு....
இழந்தவை இழந்தவையே இறந்த
காலங்கள் எதிர்காலம் ஆகாது...
காலம் மனிதனின் அருமையான
பாதை
யோசித்து செயல் படு
உயர்ந்த பாதையை அமைத்து கொள்

எழுதியவர் : உமாமணி (13-Jun-21, 11:01 pm)
சேர்த்தது : உமா
Tanglish : thannambikkai
பார்வை : 177

மேலே