பாஞ்சாலிக்கு பதிலுரைக்கும் காலம் வரும்

ஒரு நாள் உதயம்,
செந்தாமரைக் குளத்தில் வெண்தாமரை மலர்ந்திட்டால்...
பூலோகம் தன் அச்சில் புரண்டிடுமா..?
இல்லை, இதிகாசங்கள் இரங்கல் கவிதை பாடிடுமா...?
ஏதோ தவறு நடந்துவிட்டதென்று புலம்பும் ஒரு கூட்டம்...
புதுமையென்று குதூகளிக்கும் ஒரு கூட்டம்...
இயற்கையின் இறநிலையா என்று அஞ்சும் ஒரு கூட்டம்...
செயற்கை நிகழ்வா என்று அறிவியல் உரைக்கும் ஒரு கூட்டம்...
அதனால் சேவலென்ன கூவாமல் போய்விடுமா...?
இல்லை, குருவிகள் தான் இரை தேட மறந்திடுமா...?
இல்லை, காலம் தான் கற்பம் தரிக்காமல் மாறிடுமா...?
எல்லாம் நடக்காமலில்லை....
புதிதொருவர் உலா வந்தால் தெரு நாய்கள் குழைப்பதும் வழக்கம் தானே அதனால் அவர் திருடரென்று அர்த்தமாகுமோ..!
இங்கு, இளங்குமரிகள், திருமதிகள் ஏற்றம் கண்டால் இழிவு கொண்ட வார்த்தையாலே இழவுச் சடங்கு நடத்துவதும் புதுமையன்றோ..!
அழகுப் பதுமைகள் அதிகாரம் கண்டுவிட்டால் அவரினத்தாலே வசைபாடுவதும் இயல்புதானே...
கள்ளுண்டு மகிழ்கின்ற கயவர்கூட பேசமாட்டார்...
நஞ்சுள்ளே வைத்து நகையுள்ளும் கூட்டமிங்கே ஏராளம் கதை சொல்லும்...
நாகரிகப் போர்வைக்குள்ளே பயணஞ்செய்யும் கூட்டங்களே! உங்கள் நாக்குகளெல்லாம் பாஞ்சாலிக்கு பதிலுரைக்கும் காலம் தூரமில்லை என்பதை உணரட்டும்....



வேல் முனியசாமி.

எழுதியவர் : வேல் முனியசாமி (13-Jun-21, 5:05 pm)
சேர்த்தது : வேல் முனியசாமி
பார்வை : 86

மேலே