தானத்தில் சிறந்தது

" *உயிர்காக்கும் இரத்த* *தானம்"*

செயல்களில் சிறந்தது
"நிதானம்".... என்பர்....
அது...
அதை கடைபிடித்தவருக்கு
மட்டும் ...பயன் தரும்...

தானத்தில் சிறந்தது
"அன்னதானம்"....என்பர்...
அதை....
பணம் கொடுத்தும்
செய்து மகிழலாம் ....


உயிரோடு இருக்கும் போதே...
உன் உடலின்
ஒரு பொருளைத்
தானம் தருவதே
சிறந்த ஒன்று....

ஊற்றது
தோண்டத் தோண்ட
ஊறுவது போல் ...

மாதம் மூன்றானால்
உன் இரத்தத்தைத்
தானம் செய்யலாம்...
உடனே ஊறிவிடும்.

வகையறிந்து
இதைத் தானம் செய்தாலும்...

எந்த வகை
மனிதருக்குத் தரலாம்
என ....வகை பிரிக்காத
தானம்...இது ஒன்றேயாம்.


இன்று....
நான் தந்த
இரத்தத்தால் தான்...
இவனே பிழைத்திருக்கிறான்....
என்று...
சொல்லாதபடி ...

யாருக்குக்
கொடுக்கிறோம் ...என்று
அறியாமலேயே....
இதைத் தானம் செய்வோர்
அதிகம் பேர் ...

இதைத்தான்
வலக்கை கொடுப்பதை
இடக்கை கூட அறியாது
என்கின்றனர்.




மரு.ப.ஆதம் சேக் அலி
களக்காடு.

எழுதியவர் : PASALI (14-Jun-21, 7:37 am)
சேர்த்தது : PASALI
பார்வை : 307

மேலே