வெளியிலே புலி
" *வெளியிலே புலி"*
(விளம் மா விளம் மா
....விளம் விளம் மா)
விந்ததை அடக்கி வியக்கவும் வைத்தோர்
... விழுந்ததோ மடியிலே ஏனோ?
சிந்தனை அடக்கிச் சிறந்தநற்ச் சான்றோர்
... சிதைந்தனர் குடியிலே ஏனோ?
சந்தனம் மணக்கச் சபையிலே பேசி
... சண்டையோ வீட்டினில் ஏனோ?
விந்தையை எல்லாம் வெளியிலே காட்டி
... வீம்பதோ வீட்டிலே தானோ?
( *எழுசீர்க் கழிநெடில்* *ஆசிரிய விருத்தம்)*