கனம் கோர்ட்டார் அவர்களே

BREAKING NEWS ...!!

நகரத்தில் ஒரே பரபரப்பு
இளம் காதலர்கள் கைது
நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி
வழக்கு விசாரணை ..!!

இவர்களின் குற்றம் என்ன ..??
நீதிபதி கேட்டார்

கனம் கோர்ட்டார் அவர்களே ..!!

இவர்கள் "கொரோனா"
வழிமுறைகளை மதிக்காமல்
சமூக இடைவெளி இல்லாமல்
பொது இடத்தில ...
அமர்ந்து இருந்தார்கள் ஐயா ..!!

மாஸ்க் அணிந்து இருந்தார்களா ..??

ஆமாம் ஐயா ..

ஒற்றை மாஸ்கா ..இரட்டை மாஸ்கா ..!!

இரட்டை மாஸ்க் ஐயா ..!!

நெருக்கம் அதிகம்
இருக்கும் இடங்களில்
இரட்டை மாஸ்க்
அணிய வேண்டும் என்பது
மருத்துவர்களின் அறிவுரை..!!

மருத்துவர்களின் அறிவுரையை
இவர்கள் மிக சரியாக
கடைபிடித்த காரணத்தால்
குற்றமற்றவர்கள்
என்று தீர்ப்பு அளித்து
விடுதலை செய்து
வழக்கை தள்ளுபடி செய்கிறேன்..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (15-Jun-21, 9:38 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 159

மேலே