காந்தியம் போயி நாளாச்சி
காந்தி ஒரு அகிம்சைவாதி;
காந்தக்கண்ணால் உலகத்தைக் கவர்ந்த மிதவாதி.
ஆயுதம் இல்லாமலே,
ஆங்கிலேயரை இந்திய மண்ணிலிருந்து விரட்டிய தீவிரவாதி. சாதி மத வேறுபாட்டை,
வெட்டி எடுக்க முயன்ற தீர்க்கவாதி.
உப்புச் சத்தியாக்கிரகம்,
உண்ணாவிரதம் என்றே,
உலகை திருப்பிய,
புரட்சிவாதி.
மேலாடை துறந்து,
மேடைமீது முழங்கியே,
வறுமையை விரட்ட,
போராடிய போராலி.
ஆயுல் முழுவதையும்,
அன்பிலே அர்ப்பணித்து,
அராஜகத்தை அகிமசையால் விரட்டவந்த,
பொறுமைசாலி,
அவரே அண்ணல் காந்தி.
சாவா வரம் பெற்ற,
சத்திய சோதனை என்ற புத்தகம் எழுதி,
சாகும் வரை சத்தியத்தை சோதித்தே,
சாவையும் ஏற்றார்,
துப்பாக்கி குண்டை வெறியனிடமிருந்து வாங்கி.
கரங்களால் ஆடையை நெய்து,
சிகரம் படைத்தார்.
சீரிய மதநெறியை,
அகிம்சை வழியில் கடைபிடித்தார்,
ஜீவ காருண்யமே சித்தம் என்றார்.
சத்தம் இல்லாமல்,
இரத்தம் இல்லாமல்,
இதயத்தை வருடி,
சத்தியசோதனை என்னும்,
அகிம்சை ஆயுதத்தை எடுத்தே,
சரித்திரம் படைத்தார்.
ஏழ்மையாய்,
எளியவர்களுடன் வாழ்ந்தார்,
அறவழிப்போராட்டமே,
அறிவுசார் போராட்டம்,
அடி தடியில்லா,
அன்பு போராட்டம்,
ஆயுதம் தாங்காத,
ஆத்ம வழிப்போராட்டம்,
என்றே வாழ்ந்து காட்டினார்.
இன்றோ!
காற்றில் பறந்தது அகிம்சை,
கற்பூரமாய் கரைந்தது காந்தியம்,
காந்திக் கணக்கு என்றே,
கதை பேச துவங்கியது,
இளைய சமூகம்.
அகிம்சை வழி இன்று இம்சை வழியானது,
ஆட்டம் கண்டது காந்தியம்.
கதரில் நோட்டம் பார்க்குது காந்தியம்,
காசு பணத்தின் நடுவிலே,
நாணயமின்றி கிடக்குது,
காந்தியின் உருவமும்.
வன்முறை கொடுமை,
அடி தடி கலாச்சாரத்திற்கு வந்தாச்சி,
விரும்பத்தகாத செயல்களை செய்ய துடிச்சாச்சி,
காந்தியை மறந்து நாளாச்சி,
காந்தி காத்த சத்தியம்,
அவர் சாவில் மறைந்தது,
காந்தி பார்த்த சமரசம்,
அவர் கல்லறையில் தூங்குது.
அமைதிப்போராட்டம்,
என்றே ஆட்டம் பாட்டம் கொண்டாடத்தில்,
வாழ்க்கையை அழிக்கிது சமூகம்,
உத்தம காந்தி,
மண்ணில் மக்கிவிட்டான்.
அவன் காத்த காந்தியமும்,
சவக்குழியில் விழுந்து போச்சி.
அகிம்சையும், ஆபாசமாகி,
அயோக்கர்களின் ஆயுதமாய்,
வாழ்வு என்னும் கசாப்புக் கடைக்கு,
காந்தியம் போயி நாளாச்சி.