விழாமல் நடக்க ஆசைப்படாதே 555

***விழாமல் நடக்க ஆசைப்படாதே 555 ***


வாழ்க்கை...


எனக்கென்று என்
எதிர்காலத்தை கைகாட்ட...

துணையாக யாரும்
இல்லையென்று நினைக்காதே...

நீ கடந்து வந்த
வாழ்க்கையின் நிகழ்வுகள்தான்...

உனக்கான
சிறந்த வழிகாட்டிகள்...

எதிரிகள் உன்னை
சீண்டும்போது கோபம் கொள்ளாதே...

மௌனமாகவும்
பொறுமையாகவும் இருந்துப்பார்...

அவனை
அவனே வெறுத்துவிடுவான்....

மண்ணில் வாழும் உயிரினங்களுக்கு
எல்லாம் வலிகள் உண்டு...

அந்த வலிகள் சில பாடங்களை
கற்று கொடுத்துதான் செல்கிறது...

விழாமல்
நடக்க ஆசைப்படாதே...

விழுந்தால் எழமுடிகிறதா
முயற்சி செய்துபார்...

உன் பலமும் பலவீனமும்
உனக்கு புரியும்...

காட்டாறுக்கும் ஓடியாட
பாதைகள் உண்டு...

நீ வாழ்வதற்கும்
வழிகள் உண்டு...

புது புது சிந்தனைகளோடு
நீயும் முன்னேறு...

நாளைய விடியல்
உனக்கானதுதான்.....


***முதல் பூ பெ.மணி.....***

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (16-Jun-21, 5:10 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 363

மேலே