ஆன்மா
விழித்திருக்கும் போதோ எதை எதையோ
சதா தேடி அலையும் நாம்
ஒன்றை மட்டும் தேடுவதை கனவிலும்
கூட நினைப்பதில்லையே அதுவே அக்கேள்வி
'நாம் யார் நாம் ஏன்
இங்குள்ளோம் இவ்வுலகில் ?
இக்கேள்வியை மட்டும் ஒருமுறை நமக்கு
நாமே கேட்டு அதற்கு விடையும் தேடினால்
நம் மோகப் பற்றெல்லாம் இற்றுப்போகும்
பட்டமரம்போல் பின் நம் முன்னே-அகக்கண்ணால்
நம்மையே நாம் காண்போம் நம்
ஆன்மாவை ஆம் ஆன்மாவை
அழியும் நம்முடலை அல்ல -