வணக்கத்திற்குரிய வசந்தத் தென்றலே

வணக்கத்திற்குரிய வசந்தத் தென்றலே
வரவேற்கிறேன் வாழ்த்துகிறேன்
மலரிதழ்களை மோனமாய்த் தழுவி
நதியலைகளில் நீராடிக் குளிர்ந்து
இவள் கருங்கூந்தலை நீவி
மென்னிதழ்களை மெல்லத் திறந்து
ஒரு மௌனப் புன்னகையையும் உதிர்க்க வைத்தாய்
அதற்காக நன்றியும் கூறுகிறேன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Jun-21, 9:46 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 30

மேலே