மதுவை மறப்போம்

" *மதுவை மற(று)ப்போம்"*


(காய் காய் மா தேமா
...காய் காய் மா தேமா)

குடிப்பதையும் நிறுத்திவிட
குடிகள் வாழும் !
...குடிக்குமிடம் இடித்துவிட்டால்
குடில்கள் ஆளும் !


துடித்திடவே குடல்வாடும்
துயரோ கேடே !
...துணிந்திடுவாய் ஊர்கூடித்
துரத்தி மூட !


முடிசூடா தொழிலல்ல
முடிந்தால் மூடு !
...முறைமீறி மதுவுண்டால்
முடிவோ கேடு !


விடியுமுன்னே குடித்திடுவான்
விடிந்தால் நட்டம் !
...விதிவந்தால் செத்திடுவான்
விழித்தால் லாபம் !


( *எண்சீர்க் கழிநெடிலடி*
*ஆசிரிய விருத்தம்)*

மரு.ப.ஆதம் சேக் அலி

எழுதியவர் : PASALI (19-Jun-21, 5:56 am)
சேர்த்தது : PASALI
பார்வை : 54

மேலே