எகிப்த்திற்கு ஏர் டிக்கெட்

SALE ல் வாங்கிய நூல்சேலை
நீரில் நனைத்த போது
நிறம் மாறியது
உடல் சுருங்கியது
இனி கட்டுவதற்கில்லை
தலையணை உறையாய் போர்வையாய்
கிழித்து மாற்றினாள்
நனைத்தாள் நிறம் மாறி உடல் மாறியது மீண்டும்
தலையணை உறையில் நுழைய வில்லை
போர்வை கால் மறைக்க நீளம் போதவில்லை
மீண்டும் கிழித்தாள் கர்சீ ஃ ப் ஸ்கார் ஃ ப் ஆய் மாற்றினாள்
பிறவிக்குணம் மாறுமா துணிக்கு !

சேலாளனிடம் பல வடிவம் அடைந்த சேலையை
எடுத்துச் சென்றாள் கோவத்தில்
யு ஹாவ் சீட்டெட் மி யு ஆர் A CHEAT ...ஸ்கௌ ....
அமைதி அமைதி நிறுத்துங்கள் மேடம்
தண்ணீர் நினைத்தீர்களா ? ஆம் என்றாள்

அதுதான் கூடாது ...DRY WASH ஒரு சின்ன சீட்டு வைகிருந்தோமே
இது WATER ALLERGIC MATERIAL ....நீரில் நனைக்ககூடாது

இது பட்டா பருத்தியா என்ன மெட்டீரியல் ?

இது எகிப்த்தில் நைல் நதிக்கரையில் உருவாக்கப்பட்ட
EGYPTIAN காட்டன்
எகிப்த்திய பிரமிட் களில் மம்மிக்களை இந்த நூலாடையில்தான்
சுற்றி வைப்பார்களாம்
எத்தனை வித விதமான ஆடைகள் இருந்தாலும்
அரியணையில் அமரும்போது இந்த நூலாடையில்தான்
அமர்வாளாம் !
இஸ் இட் ? என்றாள்

இதோ அதே கலர் அதே மெட்டீரியல் அந்த ஈஜிப்ஸியன் ஒன்டர்
சாரி ....எடுத்துக் கொள்ளுங்கள் விரும்பினால்

இலவசமா ?...என்று கேட்டாள்

இந்த INFLATIONARY எகானமி யில் கட்டுப்படி ஆகுமா ?
உங்களுக்காக 10 % கழிவு
அட்டையை கீச்சினாள் ---இன்னொரு சேலையையும்
வாங்கிசென்றாள்
மேடம் மறந்து விட்டீர்களே ....கூல் ஐஸ் க்ரீம் FAMILY PACK
உங்களுக்குத்தான் எடுத்துக் கொள்ளுங்கள் ..இது இலவசம் தான்

ஓ நோ யு ஆர் ஸோ நைஸ் என்று குளிர்ந்து போனாள்

ஒன்றை சொல்ல மறந்து விட்டேனே ..இந்தச் சேலையை
நைல் நதியில் மட்டும் நனைத்தால் கலரும் போகாது
சுருங்கவும் செய்யாது
அப்படியா என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்

வேண்டுமானால் அங்கு சென்று எஸ்பிரிமெண்ட் செய்து பாருங்கள்
என்றான் சேலப்பன் இன்னொரு சேலையையும் தலையில்
கட்டிவிட்ட மகிழ்ச்சியில்

வீட்டிற்கு வந்து கணினி முன் அமர்ந்தாள்
எதற்கு
எகிப்த்திற்கு ஆன் லைன் ஏர் டிக்கெட் புக் செய்யத்தான் !!!

எழுதியவர் : கவின் சாரலன் (19-Jun-21, 10:35 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 33

மேலே