கவ்வுசிக்கு கவ்வுசிக்கா

ஏன்டா அமெரிக்க பேரா ஆக்காசு,
கல்யாணம் ஆகி அமெரிக்கா போனவன் அஞ்சு வருசம் கழிச்சு எங்களப் பாக்க வந்நிருக்கிற. (இ)ரண்டு அழகான் கொழந்தைகளை உன்னௌட மனைவி சுவ்வாதி பெத்நுகா குடுத்திருக்கிறா..கொழந்தைங்க. பேரு என்னடா பேரா என்னடா ஆக்காசு?
####$$$$$$
மையனுக்கு நாலு வயசு ஆகுது பாட்டிம்மா.. பேரு கெளசிக்..பொண்ணுக்கு (இ)ரண்டு வயசு ஆகுநு. பேரு கெளசிகா.
#######
என்னது கவ்வுசிக்கு கவ்வுசிகாவா? என்னத்த கவ்விப் பிடிப்பாக்கங்கணு இந்ந பேருங்கள வச்சீங்க?
#########
ஒரு பேரு கூப்படறதுக்கு சுருக்கமா இருக்கணும்.. அர்த்தம் தெரியாத இந்திப் பேரா இருக்கணும். அதுதான் எங்க தலைமுறையின் நாகரிகம் பாட்டிம்மா.
##$$###
நல்ல நாகரிகம்டா ஆக்காசு. கவ்வுசிக்குனா மாடுக்கு ஒடம்புக்கு சரியில்லைனு அர்த்தம்.. கவ்வுசிகான்னா மாட்டுத் தலைனு அர்த்தம்.
#########
ஐய்யய்யோ பாட்டிம்மா எம் பிள்ளைங்க பேரை ரொம்பக் கேவலப்படுத்நிறீங்க..நீங்க நெனைக்கிற.மாதிரி ஆங்கில Cow இல்ல. அதுதான் மாடு. அதே மாதிரி 'சிக்கு' இல்லை..',சிக்'. :கெளசிகாமாணி:ன்னாதான் பொன்முடி.. நாங்க எங்க பிள்ளைங்களுக்கு வச்ச பேருங்க இந்திப் பேருங்க மாதிரி..அர்த்தத்தைப் பத்தி கவலைப்படாதிங்க பாட்டிம்மா.
###########
சரிடா பேரான்டி ஆக்காசு..சுவ்வாதி
############
ஆகாஷ் ஆக்காசு இல்ல. ஸ்வாதி. சுவ்வாதி இவ்லங்க பாட்டிம்மா.
#########
டேய் ஆக்காசு, நா என்ற வாயில நொழைய.பேரத்தான் சொல்லுவேன். இந்திப் பேரை எல்லாம் என்னால சரியாச் சொல்ல முடியாதுடா. இப்பெல்லாம் தொலைக்காட்சி தொடர்லகூட 'வெண்பா', 'தென்றல்'னு அருமையான பேருங்கள வைக்கிறாங்க. உன்னச் சொல்லிக் குத்தமில்லை..பத்தோட பதினொண்ணா பணம் சம்பாதிச்சு சொகுசா வாழணும் நெனைக்கிறவங்களுக்கு தாய்மொழிப் பற்று இருக்காதுடா.
####$##############_################
இன்டியாசைல்ட்நேம்ஸ்.காம்

எழுதியவர் : பெயராசை (19-Jun-21, 11:50 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 54

மேலே