அலட்சியம்

படிக்காமல் LIke செய்யாதீர்
'அசோக்' இவன் ஒரு 'வி.ஐ.பி.' இப்போ எல்லோருக்கும் இந்த 'வி.ஐ.பி.'அர்த்தம் சரியா புரியும்னு நினைக்கிறேன். ஆளு கொஞ்சம் பந்தா பார்ட்டியும் கூட. எப்பவும் துறுதுறுன்னு எதாவது செஞ்சிட்டு வம்புல மாட்டிக்குவான். வேலை தேடுறத பெரிய வேலையா இவன் பாத்துட்டு இருக்கான்.

வீட்டுக்குப் போனா அம்மாவோட நக்கல். ஏன்னா இவன் தங்கை படிச்சிட்டே வேலைக்குப் போறா. அந்தப் பொண்ணுக்குக் குடும்பத்துமேல இருக்குற அக்கறைகூட உனக்கு இல்லையேனு.

அப்பா சொல்லவே வேண்டாம். தட்டுல சோத்த போட்டு "அசோக் இங்க வா செல்லம். மை டார்லிங் ! புஜ்ஜி ! "னு கொஞ்சுவாரு. டெய்லி காலை, மாலை வாக்கிங் கூட்டிட்டுப் போவார். என்ன முழிக்கிறீங்க ? அவர் வாக்கிங் கூட்டிட்டுப் போறது அவருடைய செல்ல நாயை. மகனை அல்ல!

இவன் சோறு சாப்பிடும் போதெல்லாம் "தண்டம் தண்டம் ! உதவாக்கர !. அதோ அந்த நாய்கூட இதுவரை ரெண்டு தடவ cross பண்ணி 1000 ரூபா சம்பாதிச்சு கொடுத்திருக்கு. ஒரு பைசாக்குப் பிரயோஜனம் இல்லை. டெய்லி வேலை தேடுறேனு கிளம்பி ஊர சுத்த வேண்டியது. தீனி மாடு ". இந்த சங்கீதம் இல்லாம அவன் சாப்பிட்டதே இல்லை.

ஒரு நாள் அசோக் அப்பா அவன்கிட்ட 100 ரூபாயும், ஒரு விசிட்டிங் கார்டும் கொடுத்து, (இது வரை 20 ரூபாக்கு மேல அவர் கொடுத்ததே இல்ல. 100 ரூபா கண்ணுல பாத்த உடனே அவன் ஷாக் ஆகிட்டான். அவன் அப்பா சொல்ற எதுவுமே அவன் காதுல விழல. அதுக்கு பதிலா பளார்னு ஒரு அறைதான் விழுந்துச்சு) "நான் காட்டுக் கத்து கத்திட்டு இருக்கேன். இங்க பாரு இவன ! பகல்லயே கனவு கண்டுட்டு இருக்கான். இந்தா நாளைக்கு இந்த அட்ரஸ்ல காலைல பத்து மணிக்கு இண்டர்வியூ. என் ப்ரண்ட ரெக்கமண்ட் பண்ணி இருக்கான். கண்டிப்பா வேலை கிடைக்கும். காலைல பத்து மணிக்கெல்லாம் அங்க இருக்கணும். நல்ல டிரேஸ்ஸா போட்டுகிட்டு நீட்டா போ. ஆட்டோல போயிடு. பஸ் பஞ்சர் ஆகிடுச்சு, என் டைம் சரி இல்ல,
அது இதுன்னு கதை சொன்ன, உண்ண கொண்ணே போட்டுடவன். " என்றார்.

"சரி டாடி"ன்னு தலைய நல்லா ஆட்டிட்டு அந்த அட்ரஸ பாத்திட்டே படுக்கைக்குப் போனான். அது ரொம்ப தூரம் எல்லாம் இல்லை. இவன் ஏரியால இருந்து ஐஞ்சு Stoppingதான். ஆட்டோல போனா 50 Rs. பஸ்ல போனா 15 Rs. அதுவும் white boardனா 5 Rs.தான். காலையில 9 மணிக்கு வீட்டவிட்டு கிளம்புனாகூட 30 நிமிஷத்துல போயிடலாம். அப்பா கிட்ட ஆட்டோல போனோம்னு பொய் சொல்லி ஒன் வீக் நெட் கார்டு போட்டு fbல chat பண்ணலாம். பசங்க போஸ்ட்ல கலாய்ச்சு எவ்ளோ நாளாச்சு ? கனவோடு தூங்கினான்.

காலை 8 மணி அலாரம் அடிக்கல. இவன் தல மேலயே வந்து விழுந்துச்சு. "எருமை இன்டர்வியூ இருக்கு. காலையில எழுந்து நாலு புக்ஸ், இல்ல நியூஸ் பேப்பர பாத்து நாலு விஷயம் தெரிஞ்சுகிட்டு, இண்டர்வியூல பதில் சொல்லலாம்னு இல்லாம எப்படித் தூங்குது பாரு? " என்று அப்பா கத்தினார்.
காலையிலே ஆரம்பிச்சுட்டாருடா அர்ச்சனை, அபிஷேகத்தனு முனங்கிக்கிட்டே கட்டிலைவிட்டு எழுந்து அரைதூக்கத்தோடு பாத்ரூமிற்குள் நுழைந்தான்.

பையன் இண்டர்வியூ போக அப்பா ட்ரெஸ் அயர்ன் பண்ணி, ஷூ எல்லாம் பாலிஷ் பண்ணி பளபளன்னு வைச்சிருந்தார். (இது எப்பவும் நடக்கறது இல்ல. இண்டர்வியூ போறது இவர் நண்பன் ஆபீஸ். இவன் நீட்டா போலனா இவருக்குத்தானே அசிங்கம். அதான் இந்த
பில்டப் )

சரியாக 9 மணிக்குப் பஸ் ஸ்டாண்ட் வந்து நின்றான். வழக்கம்போல தொடர்ந்து ஒரே டீலக்ஸ் பஸ்ஸா வந்துட்டு இருந்துச்சு. அதான் டைம் இருக்கே. அதனால white boardகாக துரை வெயிட்டிங். white board வந்துச்சு பதினைந்து நிமிடம் கழிச்சு. அதுவும் செம ரஷ்ஷா. இவனுக்கு ரஷ்ஷான பஸ்னாலே அலர்ஜிதான் கூட்ட நெரிசல்ல நசுங்கணுமேன்னு ? ஆனா இன்னைக்கு வேறு வழி இல்லை. ஏறித்தான் ஆகணும். அடுத்த பஸ் எப்போ வரும்னு தெரியாதே. பஸ் ஏறி டிக்கெட் வாங்கி அதை கைவிரல் மோதிரத்தோட இடுக்குல சொருகி வைச்சிட்டான். இதுவும் பந்தாவாம்.

இரண்டு ஸ்டாப் தாண்டின உடனே செக்கிங் வந்தாங்க. பஸ்ல (இங்க தான் கதையில ட்விஸ்ட் )
செக்கிங் இவன் கிட்ட வர வரைக்கும் அப்படியே தெனாவட்டா நின்னுட்டு இருந்தான். ஏன்னா சார்கிட்டதான் டிக்கெட் இருக்கே. செக்கிங் கிட்ட வந்து 'டிக்கெட்டு'ன்னு கேட்ட உடனே பாத்தா கைல இருந்த மோதிரத்தைக் காணோம். அப்படியே உறைஞ்சு போயி நின்னான் ஒரு நொடி. கீழே தேட ஆரம்பித்தான்.

செக்கிங் இவனைப் பாத்து, "என்ன ராஜா தேடற?"னு கேட்டார். அசோக் "மோதிரத்தைக் காணோம் சார்"னு சொல்ல, அதுக்குச் செக்கிங் "மோதிரத்தைச் சாவகாசமா தேடு ராஜா. டிக்கெட்ட கொடு. நான் கிளம்பணும்"னு சொல்ல, அசோக் "டிக்கெட்ட மோதிரத்துலதான் சார் சொருகி வைச்சிருந்தேன். இப்போ மோதிரத்தையே காணோம். அதான் டிக்கெட்டாவது கீழ இருக்கான்னு தேடறன்" என்றான்.
செக்கிங் "என்னப்பா கலர்கலரா கதை விடற. okay இறங்கு. நாம இன்னும் நிறைய கதை பேசலாம்"னு சொல்லி அவனைப் பஸ்ஸிலிருந்து கீழே இறக்கிவிட்டார்.

இப்போது அந்தச் செக்கிங் கொஞ்சம் மனமிறங்கி "ஆமாம் பிளேடு போட்டிருக்கானுங்க. இவ்ளோ அஜாக்கிரதையாவா ராசா இருக்குறது? எல்லாம் okay டிக்கெட்டாவது பாக்கெட்ல வச்சிருக்கலாமே ? அதை ஏன் மோதிரத்துல சொருவுன ? அது என்ன ஸ்டாண்டாயா ? " என்றார்.

. அசோக் "இல்லை சார். ஒரு ஸ்டைலுக்குத்தான் அப்படி வைச்சேன்" என்றான்.
செக்கிங் "டிக்கெட் வைக்கறதுல என்னயா ஸ்டைலு வேண்டியிருக்கு? அப்போ வா. ஸ்டைலா வந்து ஒரு வாரம் ஜெயில்ல இரு. இல்லைனா உங்க அப்பாவ வரச் சொல்லி ஃபைன கட்டி கூட்டிட்டுப் போகச் சொல்லு" என்றார்.

அசோக் "சார் எங்க அப்பா ஆட்டோல போகச் சொல்லித்தான் காசு கொடுத்தார். நான்தான் நெட் கார்டு போட உதவும்னு பஸ்ல போயி சிக்கனம் பண்ணலாம்னு வந்தேன் சார்" என்றான். செக்கிங் "அவர் சரியாதான் சொல்லியிருக்கார். இது மாதிரி தடங்கல் வரும்னு தெரிஞ்சு. நீங்கதான் பெத்தவங்க பேச்ச கேட்டா உருப்பட்ருவீங்களே. சரி போ. போயி இண்டர்வியூ அட்டண்ட் பண்ணு. அதுக்காவது பஸ்ஸூக்குக் காசு இருக்கா? என்றார். அசோக் "இல்லை சார். இன்னும் கொஞ்ச தூரம்தான். நான் நடந்தே போயிடுவேன். ரொம்ப தாங்க்ஸ் சார்"னு சொல்லி அங்க இருந்து வேகமா நடக்க ஆராம்பிச்சான்.

அவன் நடந்து வந்து அட்ரஸ் தேடிக் கண்டுபிடிச்சு உள்ளே நுழையும்போது மணி 12:00. வாசலில் இருந்த வரவேற்பாளரிடம் "இண்டர்வீயூக்கு வந்திருக்கே"னு சொல்லும்போது அந்தப் பெண் இவனை ஏற இறங்க பாத்து, "10 மணி இண்டர்வியூக்கு 12 மணிக்கு வர்றீங்க. இண்டர்வியூக்கே இப்படினா நீங்க எங்க இருந்து வேலைக்கு வரப் போறீங்க? இண்டர்வியூ எல்லாம் முடிஞ்சு சார் கிளம்பிட்டார். நீங்க அடுத்த முறை வாங்க"னு அவன் சான்றிதழ் மற்றும் resume xerox copy வாங்கி வைச்சுக்கிட்டாங்க.

வீட்டுகாகு போனா அவ்ளோதான்' என்று புலம்பிக்கொண்டே வீட்டை நோக்கி நடந்தான். அப்புறம் என்ன வழக்கம்போல வீட்டுல பூஜைதான் தினம் தினம்.

நாம் செய்யும் சிறு அலட்சியங்கள்கூட பெரிய லட்சியங்களை இழக்க காரணமாகிறது.

எழுதியவர் : மாயோன் (20-Jun-21, 8:39 pm)
சேர்த்தது : Mayon
Tanglish : alatchiyam
பார்வை : 131

மேலே