அழுகை...

*_கவிதை ரசிகன்_* படைப்பு...



*அழுகை.....*

தாங்கமுடியாத
துக்கத்தை
வடித்தெடுக்கும்
ஒரு வடிகால் ......

சிறுவர் சிறுமியர்கள்
நினைத்ததைச்
சாதித்துக் கொள்ள
அடிக்கடி பயன்படுத்தும் அகிம்சைவழி ......

ஆழ்ந்த தூக்கத்திற்கு
அழைத்துச் செல்லும்
அருமையான தாலாட்டு .......

பெண்களிடம் இருக்கும்
கைவந்தக் கலைகளில்
இதுவும் ஒன்று ......

மனிதர்களுக்கும்
விலங்குகளுக்கும்
இது பொதுவான ஒற்றுமை .....

கல் நெஞ்சத்தையும்
கரைக்கும்
ஆற்றல் பெற்ற
ராஜதிரவம்.......

அனுதாப ஓட்டுகள்
அதிகம் பெற்று
ஜெயித்து விடும்
அரசியல்வாதி....

அன்பு
கருணை
பாசம் இருக்கிறது
என்பதை
அறிந்துக் கொள்ள உதவும்
அடையாளம்....

கைக்குழந்தைகள்
அம்மாவோடு பேசும்
இன்னொரு மொழி...

அழுகை
பெண்களின் பலம்
ஆண்களின் பலவீனம்...

*கவிதை ரசிகன்*

எழுதியவர் : கவிதை ரசிகன் (19-Jun-21, 8:17 pm)
Tanglish : azhukai
பார்வை : 32

மேலே