ஈழம் இன்று ஈசலானாதே

கருத்தரித்த உடலென்றும் கருதாமல் கற்பை களவாடி தின்றபோது,
கருமுட்டை உடைந்து என் காலடியில் பிறந்தாயே,
அப்போது உனை பார்பதற்கு ஈசன் சிறத்தினிலே ஆட்கொண்ட வளர்பிறை போன்று இருந்தாயே,
என் தாயே!
வரும்போதே விழுங்கி விட்டாய் என்றது ஒரு கூட்டம்,
இவை நேரத்திற்கு ஏற்ப அடிக்கடி தலையாட்டும்,
வாழ்கின்ற வாழ்க்கைத்தனை யாரும் அமைத்து விட முடியாது,
இது எல்லாம் மேலே இருப்பவனின் சதி என்று இன்னும் சிலருக்கு தெரியாது,
தாயின் கருவறையை சிறை என நீ என்னி உள்ளே குரல் கொடுத்தாய்,
வலியால் வெளிவந்து விலை மதிப்பில்லா கற்பினை இங்கே பறிகொடுத்தாய்,
ஈழம் ஈழம் என்று சொல்லி இங்கே விடியலுக்காய் தவிக்கின்றோம்,
இன்னும் திருந்தாமல் இருப்பதினால் இம்மண்ணில் உயிர் துறக்கின்றோம்,
புரிந்து கொண்டேன் இருப்பினும் இரு பொழுது வாழ்ந்திடவே மனம் ஊசலாடுதே,
மதிப்பில்லா ஈழம் இன்று ஈசலானாதே.

எழுதியவர் : தமிழ் உதயன் (19-Jun-21, 10:45 pm)
பார்வை : 64

மேலே