கண்ணகியும் மாதவியாய்

பெண்ணை தெய்வமாய் வணங்கினாலும்
போகமாய் பார்க்கும் படி ஆனது ஏனோ ?...

ஆணுக்கு நிகராய் அனைத்தும்
செய்திடும் பெண்தனை பேடியாய்
பேசும் படி ஆனதும் ஏனோ ???...

போராடி போட்டிகளை வென்றிடினும்
வேசியாய் வார்க்கும் வன்மமும் ஏனோ ???...

கடைமைக்காக கஷ்டம் கொள்ளும்
பெண்தனை காமபதுமையாய்
கற்பனை கொள்ளும் கயவர்கள்
கண் திறப்பது எப்போதோ ???...

தன்னில் பாதி பெண் கொண்ட
கடவுள் கதை பல பேசினாலும்
பெண்ணை பிழை கொள்ளும்
நிலை தான் ஏனோ ???...

ஆண் வென்றால் திறமை
பெண் வென்றால் மகிமை
மனதால் மிருகமாயிருக்கும்
மதி கெட்டவர்களை மனிதனாய்
ஏற்பது எப்படியோ ???....

தன்னை உயர்த்தும் திறன் கொள்ளாத
தற்குறிகள் எல்லாம் சேர்த்து
செய்யும் சதி தான் இதுவோ ???...

தடைகளை தகர்த்து எறியும்
சக்தி கொண்ட பெண்ணும்
தன்னை தவறாய் பேசாதிருக்க
தனி ஒரு தவம் கொள்ள வேண்டுமோ ???...

மதி உயர்ந்து மனிதனாய்
மாற்றம் கொண்ட மனிதர் தம்
மனங்கள் மதி இழந்ததால்
இன்று கண்ணகியும்
மாதவி தான்....

ஆம் அறிவிலிகள் அவர்தம்
பார்வையிலே அனைவரும்
மாதவி தான் இன்று ...

இவன்
மகேஸ்வரன்.கோ ( மகோ)
+91-9843812650
கோவை -35

எழுதியவர் : மகேஸ்வரன்.கோ ( மகோ) (19-Jun-21, 12:56 pm)
சேர்த்தது : மகேஸ்வரன் கோ மகோ
பார்வை : 37

மேலே