அ முதல் ஃ வரை வாழ்க்கை

அன்பு அதை அனைவருக்கும் ,
ஆசையாய் அளிக்க ,
இன்பம் பெருகும் ...

ஈகை கொண்டு இருகரம் உயர்த்தி ,
உயிர் காக்க
ஊர் புகழும் ...

எடுத்த ஜென்மம் அதில் எக்குறையுமின்றி,
ஏற்றம் கொள்ள ,
ஐயமின்றி அன்பு கொள் ...

ஒருவர் இடத்திலும் பகைமை
ஓங்காது , ஒட்டி வாழ்ந்து ,
ஒளவியம் பேசாதிரு...

ஃ ஐ போல் பிரிந்தின்றி ஒற்றுமையாய் ,
ஒன்று கூடி வாழ்ந்திட ,
வாழ்வு வளமாகிடும் ....

இவன்
மகேஸ்வரன். கோ (மகோ)
+91-9843812650
கோவை-35

எழுதியவர் : மகேஸ்வரன். கோ (மகோ) (19-Jun-21, 11:58 am)
சேர்த்தது : மகேஸ்வரன் கோ மகோ
பார்வை : 55

மேலே