கல்யாணப்பரிசு
காதலித்த காதலி பரிசாக
காதலித்து கல்யாணம் செய்பவனுக்கு...
வாழ்க்கை பரிசாக
வாஞ்சையாய் மனையாள் வாய்த்தவனுக்கு...
இணையே பரிசாக
நல்ல துணையாய் மனைவி பெற்றவனுக்கு...
வரதட்சணை பரிசாக
வாழ வக்கில்லாத மணமகனுக்கு ...
வாலிபம் பரிசாக
வாளிப்பான வாழ்க்கை கிடைத்தவனுக்கு ...
வருத்தங்கள் பரிசாக
வன்சொல்லும் வாழ்க்கைத்துணை வாய்தவனுக்கு ...
கல்யாணமே பரிசாக
காலம் கடந்து காத்துயிருப்பவனுக்கும் ,
முற்றி முதிர்கன்னியாய் முடி நிரைத்தவளுக்கும்,
கைம்பெண்ணாய் காலத்தை தொலைத்தவளுக்கும்...
ஆம் கல்யாணம் என்பதே பரிசு தான்
எதிர்பார்ப்பில் ஏமாற்றம் கொள்ளும் ஏனைய மக்களுக்கு ...
இவன்
மகேஸ்வரன். கோ( மகோ )
+919843812650
கோவை