காசை கரியாக்காதே
காசை கரியாக்காதே;
காற்றைப்போல் தூற்றாதே;
காலைப் பொழுதை வீணாக்காதே;
கண்டதையும் கேட்டுத் தொலைக்காதே;
கண்ணீர் விட்டுக் கதறாதே;
கஞ்சனாய் இருக்க பழகாதே;
கல்லைப் போல் இதயத்தை
இறுக வைக்காதே;
கடமை செய்ய மறக்காதே;
கரடு முரடாய் இருக்காதே;
அகலக்கால் வைக்காதே;
ஆழம் தெரியாது காலைவிடாதே;
அற்பப் பொருளுக்கு ஆசைப்படாதே;
ஆணவம் கொல்லாதே;
அகங்காரம் பிடித்துத் திரியாதே;
அகராதி பிடித்து பேசாதே;
அறிவை அழிவுக்கு பயன்படுத்தாதே.
கருப்பையில் இருந்து வந்தவன் நீ;
கற்ப்பை விலைபேசாதே.
கற்பனைஉலகில் வாழாதே;
கள்ளத்தனம் செய்யாதே;
கண்ட படி வாழாதே;
கயவனாய் இருக்காதே;
கண்ணியத்தை விட்டுக்கொடுக்காதே;
கட்டியவளை மிதிக்காதே;
கெட்ட பெயர் எடுக்காதே;
கண்டதையும் பூசாதே;
கட்டழகை சிதைக்காதே;
கட்டிக் காத்த மானத்தை,
காற்றில் பறக்க விடாதே;
காலத்தை வீணடிக்க நினைக்காதே;
கையைவிட்டு மீதி நாட்களை எண்ணாதே;
கெட்டவனாய் இருக்க நினைக்காதே;
கெட்டது செய்ய விரும்பாதே;
கெட்டு போயிவிட துடிக்காதே;
கேட்டதையெல்லாம் உண்மையென்று நம்பாதே;
கேள்வி ஞானம் இன்றி இருக்காதே;
கல்லாய் சிலையை நினைக்காதே;
கற்பனைச் சிறகை முறிக்காதே;
புல்லாய் மிதிக்க விடாதே;
புயலாய் மாறாதே;
புலிபோல் சீற்றம் கொல்லாதே;
பகையை மூட்டிவிடாதே;
பாழும் கிணற்றில் விழாதே;
பண்பை விட்டு விடாதே;
இரவு பகலை கழிக்காதே;
இளமையை அழிக்க நினைக்காதே;
உறவை மறக்க நினைக்காதே;
ஊரோடு கூடிவாழ மறக்காதே;
வேண்டாததை செய்யாதே;
வேதனையில் துடிக்காதே;
தீண்டாமையைத் தீண்டாதே;
திருடனாய் வாழதே;
பழமையை மறக்காதே;
பாழாய்ப்போக நினைக்காதே;
பாசம் வைக்க மறக்காதே
பணம் காசு பார்த்து,
பாசத்தை பிரிக்காதே;;
மறந்தும் பொய் சொல்லாதே;
மரியாதை குறைவாய் நடக்காதே;
மனம் விட்டு பேசாமல் இருக்காதே;
பணம் பணம் என்று ,
பைத்தியம் பிடித்துத் திரியாதே;
பிறர் வாழ்க்கையைக் கெடுக்காதே;
ஊரைச் சுற்றி வராதே ;
உதவாக் கரையாக இருக்காதே;
வெட்டியாக திரியாதே;
வேதனையை மூட்டாதே;
வெறியனாக இருக்காதே;
வெறும் பயலாகத் திரியாதே;
தூங்கித் தூங்கி விழாதே;
துக்கம் தாங்கி வீழாதே;
துடித்து துடித்து கிடக்காதே;
நடித்து நடித்து ஏமாற்றாதே;
நல்லது செய்ய மறக்காதே;
தயங்கி தயங்கி நடக்காதே;
தன்னடக்கத்துடன் வாழ,
மறக்காதே.