தேநீர் உரையாடல்
கூடிப் பேசும்
கூட்டங்களிலெல்லாம்
தேநீர் பரிமாறப்படுகிறது...
அவர்களின் சூடான
விவாதங்கள் ...
இப்படியாவது...
அணையட்டுமே என்றா?....
முக்கிய முடிவு எடுக்கப்படும்
அலுவலக சந்திப்புகளில் கூட
தேநீர் பரிமாறப்படுகிறது...
சூடான தேநீரோடு
சூடான விவாதங்களை
மறைப்பதற்கா?...
கிராமத்துத்
தேநீர் கடையில் கூட
அதிகாலை வேளைகளில்
உழவர்கள் எல்லாம்
சுடச்சுட... தேநீர் வாங்கி
வாயிலேயே....
அதை ஆற்றிக்
குடிப்பதைப் பார்த்திருக்கிறீர்களா?....
அவசரமல்ல அது...
பழக்கமுமல்ல அது...
பெய்யாத மழைக்காய்
கடவுளை ஏச
அதிகாலையில் கூட
நாக்கிற்கு பலம்
வந்து விடாமல் ...
அதை அடக்கவே....
அப்படிக் குடிக்கிறார்கள்...
ஆக...
தேநீருக்கு...
ஒவ்வொரு இடத்திலும்
வெவ்வேறு ரசிகர்கள்....
மன்னிக்க வேண்டும்...
ருசிகர்கள்.
மரு.ப. ஆதம் சேக் அலி
களக்காடு.