என்னவென்று சொல்ல

என்ற வென்று சொல்ல,
உன் வெட்கத்தை எப்படி அள்ள.
அட
என்ன வென்று சொல்ல,
நான் எப்படி இனி செல்ல.
என்ன வென்று சொல்ல,
நீயும் மெல்ல மெல்ல வந்து துள்ள.
அட என்ன வென்று தள்ள,.
உன் மௌனத்தை எப்படி விட்டுத் தள்ள.
என்ன வென்று சொல்ல,
என்னை நீ உன் விழியால் கொல்ல – கொள்ள.
என்ன வென்று நான் சொல்ல,
எப்படிப் புகுந்தாய் சுவாசமாய் உள்ளே மெல்ல.
என்ன வென்று நான் சொல்ல,
எடுத்தது வெட்கம் மெல்ல.
என்ன வென்று சொல்ல,
என்மனதில் பூத்தாய் மணந்தே மெல்ல .
என்ன வென்று சொல்ல,
என் உயிர் அணுக்களுக்குள் புகுந்தாய் கொல்ல.
என்ன வென்று நான் சொல்ல,
என் கண்ணுக்குள் முத்தமிட்டாய் மெல்ல.
என்ன வென்றே சொல்ல
என் உசுராய் உடலில் தங்கினாய் மெல்ல
என்ன வென்று சொல்ல,
என் இதயம் துடித்தது,
மெல்ல.
சொல்லச் சொல்ல சொட்டுதடா வெட்கம் மெல்ல

சுற்றி சுற்றி வந்தவனே,
சுகத்தைச் சுட்டுப்போட்டவனே.
அட நெற்றிப்பொட்டாய்,
அமர்ந்துவிட்டாய்,
நெஞ்சத்திலே தங்கிவிட்டாய்
நினைப்பையெல்லாம் பொசுக்கிவிட்டாய்.
சுற்றிச் சுற்றியே வந்து,
கட்டிய சேலையாய்,
கட்டிப்பிடித்துவிட்டாய்.
தொட்டுத் தொட்டு பேசியே,
தொத்தியே தொத்துநோய் ஆக்கிவிட்டாய் .

என்ன வென்று சொல்ல,
உந்தன் கால்தடம்,
சப்தம் இட,
என் மனக்கதவு திறந்ததடா மெல்ல..
கண்ணிரண்டும் இமைத்து காதல் லீலை புரியுதடா,
கட்டழகு வடித்தே கொல்லுதடா,படித்த உதடும் படுத்துதடா
பதித்த நக தடையமும்,
தடுமாற வைக்குதடா.
உடுத்திய உடையும் கழலுதடா
உடலும் உன்னை நினைத்தே கண்ணீர் வடிக்குதடா.

அட அன்பில் புகுந்தவனே,
அம்மாய் இதயத்தை தைத்தவனே,
அட அள்ளி அனைத்தவனே,
அருகில் வந்து ஆசைப் பசியை மூட்டி,
என்னுள் கிடந்தவனே

என்னவென்று சொல்ல;
கண்ணசைவில் இருந்தாய்,
கட்டழகை ரசித்து விட்டாய்,

கட்டளையிட்ட மனசை
கட கடவென்றே சரித்து விட்டாய்.
சொல்லித்தந்த லீலை,
சொர்க்கத்தைத் தேடுதடா,
அள்ளிக்கொடுத்த ஆசை,
அடித்தே பாயுதடா;
என்னவென்று சொல்ல

என்ன வென்று சொல்ல
ஏங்கி தவிக்க விட்டாய்,
மீண்டும் மீண்டும் துடிக்க
மீளாத சொர்க்கத்தைக் காட்டிவிட்டாய்.

உடலும் இருந்தே தவிக்கும்
அந்த நிலவும்
உன்னிடம் வந்து இரவல் கேட்கும்.

அந்த நிலவைக்கேள்
அது உ னிடம் இதயத்தை தூது அனுப்பும்,
மனதைக்கேள் அது மயங்கித் திரியும்,
பொழுதைச் சொல்லும்.

என்ன வென்று சொல்ல
உன் வெட்கத்தில்,
ஏன்
இத்தனை வெட்கை,

என்ன வென்று அள்ள,
உன் வெட்கத்தைக் கொட்டினாய் மெல்ல,
மேனியும் கூசுதடா,
மேகமாய் கரங்கள்
தழுவுதடா.

நழுவும் நாணத்திலே
நனைந்தே தேடுகின்றாய்
சொல்லிடும் போதையிலே
சொர்க்கத்தைத் தேடுகின்றாய்,

என்ன வென்று சொல்ல
உன் வெட்கத்தை நான் எப்படி அள்ள
என்னவென்று சொல்ல செப்படி வித்தையை எப்படி கற்று தர
அட
அன்பை பொழிந்தவளே,
அழகைப் பிழிந்தவளே,
அள்ளித் தெளித்தவளே,
சொல்லித்தந்தவளே,
சொர்க்கத்தில் நனைத்தவளே,
சொல்லாமல் கொள்ளையடித்தவளே,
என்ன வென்று சொல்ல,
நான் எப்படி இனி செல்ல

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (20-Jun-21, 9:54 pm)
Tanglish : ennavendru solla
பார்வை : 1850

மேலே