கூட்டிக் கழித்தால் வாழ்வு ஒன்றுமே இல்லை

உலகமே ஒரு விந்தையான பொருள்தான்
எப்போதும் கிட்டாது இறைவன் அருள்தான்

ஏன் உலகம் உண்டானது என்பது ஒரு மருமம்
கருணை மனிதரின் சொத்து என்பது தருமம்

கோடியில் பிறந்தனர், இருந்து, மறைந்தனர்
பலரும் தம்மிடம், உண்மையை மறைத்தனர்

சிலர் கடவுளின் அவதாரமாக கருதப்பட்டனர்
பலர் சமுதாயக் கிருமி என ஒதுக்கப்பட்டனர்

ஆசை கொண்ட ஜனங்கள் ஒருபுறம் இருக்க
சிலர் பணத்தை குவித்தனர், கூட்டிப் பெருக்க

ஞானம் குறைவு; விஞ்ஞானம் ஓங்கியுள்ளது
குணம் நலிவு; பண ஆசை பொங்கியுள்ளது

சான்றோர், கற்றோர், உற்றோர், பெரியோர்
யாவருமே புலனின்பம் காணும் சிறியோர்

அதிகக் காசு இருந்தால் அதிகப் பசி இல்லை
குறைவு காசு இருப்பின் பசி குறைவதில்லை

ஏதோ ஒன்றை அடைய அவதிப் படுகிறோம்
அடைந்தவுடன் ஏன் என அவதிப் படுகிறோம்

பிறர்க்கு அறிவுரை கரும்பு சுவைப்பது போல
தமக்கு நல்லுரையோ, பாகற்காய் ரசம் போல

என்ன பாசம் என்ன நேசம், எல்லாம் வேஷம்
பணம் இல்லாது போனால் எவரும் தோஷம்

இவ்வுலகில் பெருமையாக எதுவும் இல்லை
கூட்டிக் கழித்தால் வாழ்வு ஒன்றுமே இல்லை

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (21-Jun-21, 4:54 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 27

மேலே