நம் சந்தோஷம் நம் கையில் இல்லை நம் மனதில்
யாருக்குத் தான் வேண்டாம், இந்த சந்தோஷம்
யாரிடம் தான் இல்லை, நான், எனது என்கிற ரோஷம்
இனிய புன்னகை ஒருவனுக்கு அருமையான தோழன் தான்
கடுங்கோபம் ஒருவனுக்கு வேண்டப்படாத பகைவன் தான்
நாம் நினைத்தது போல் நடந்தால், இந்த உலமே சொர்கம்
மாறாக நடந்திடில், இந்த உலகத்தைவிட நரகமே சொர்கம்
நம் கையில் என்ன இருக்கிறது, விரல்களும் நகமும் தான்
நம் மனதிலோ ஈரேழு உலகமும் தாண்டவம் ஆடுகிறது
ஆசையைக் கூட அவ்வப்போது கட்டுப் படுத்தி விடலாம்
கண்ணுக்குத் தெரியாத மனதை.ம்ம்.என்ன சொல்ல?
மனதை கட்டுப் படுத்துவது மிகப் பெரிய விஷயம் இல்லை
விழிப்புணர்வுடன் செயல்படாமல் இருப்பது தான் தொல்லை
மனசாட்சியின் குரலை கூர்ந்து கேட்டால் விழிப்புணர்வு எழும்
இதற்காக தினசரி பதினைந்து நிமிடமாவது நீர் முன்னே எழும்
அமைதியான சூழ்நிலையில் நம்மை நாமே நோக்க வேண்டும்
எண்ண அலைகளின் போக்கை தூர இருந்து கவனிக்க வேண்டும்
ஈடுபாடு கொள்ளாமல், சாட்சியாளனாக பார்க்க வேண்டும்
பாகுபாடு இன்றி எண்ண சிதறல்களை கோர்க்க வேண்டும்
ஆனால், மிகவும், மிகவும், மிகவும் முக்கியமானது, தொடர்ச்சி
தொடர்ச்சி இல்லயேல் நிச்சயம் தோல்வி தழுவும் நம் முயற்சி
இந்த செயலை இடைவிடாது,15 நாட்கள் செய்ய வேண்டும்
அப்போதுதான், அமைதி சிந்தனையின் பலன்கள் கிடைக்கும்
இந்த முறையை செய்ய, செய்ய, இதில் ஒரு ஈடுபாடு வரும்
அதன் பிறகு, மனம் அதிகமாக நல்ல கட்டுப் பாட்டில் வரும்
ஆனந்த ராம்