எப்போதும் போல
வைரமுத்துவின்
வைர வரிகளைப்போல்
இந்திய மண்ணில் நட்டப்பட்டது
இந்தியனாக இருக்கலாம்,
நடப்பட்டது என்னவோ
நம் தமிழக மக்கள் தானே !
நீர் ஊற்றி காக்க யாருமில்லாத போது
வேறுஎப்படி சொல்ல !
தாகம் தணிக்க
தவமிருக்கும் தமிழகம் ,
அந்நியனைப்போல் உதவாத
அண்டை மாநிலங்கள் ,
மஹாபாரத மண்ணுக்கு
மாறாத பங்காளிச் சண்டை
என்றும் நிரந்தரம் என்பதற்கு
இது ஒரு ஆதாரம்
நதிகளை இணைக்க
நடக்கும் பேச்சு வார்த்தைகள்
ஒலிக்கின்றது நாடெங்கும்
விழுகின்ற அருவி போல ,
நிரந்தர முடிவும்,
நீர் வரத்தும் ஏதுமின்றி
சீராக ஓடிக்கொண்டிருக்கிறது
காலம் எப்போதும்போல.