தாய்

தன்னை தந்து , தன்னுள் முளைத்த தன் விதையை ,
தவமிருந்து தரணிக்கு தந்த தனிப்பெரும் தெய்வம் ...

தன் நலன் பாராது , தன்னையே அர்ப்பணித்து ,
தன் சந்ததி காக்கும் தன்னிகர் இல்லா ,
தர்மப்பெண் ...

தன் உதிரம் தனை பாலாக்கி, தன் பிள்ளை அதனை
வளர்க்கும் , தன்னலம் அறியா ,
தனித்துவம் ...

தனித்து இருந்தாலும் ,தடைகள் பல பார்த்தாலும் ,
தன்னையும் தந்து , தன் பிள்ளை தன்னை காக்கும்
தைரியப்பெண் ..

தரணிதனில் தனக்கு நிகர் வேறன்றி ,
தன்னை தனதாக்கி , தன்னை அன்றி ,
தன்னிலை தரிக்க எவருமின்றி ,
தனக்கென்று ஏதும் தெரியா
தன்நலன் காணா, தனி பெரும் சக்தி ...

தாய் அன்றி தனி சக்தி ஏதும் இல்லை ,
தன் தாயை தவிக்க வைத்தவன் ,
தரணியில் நலம் பெற வாழ்வதில்லை ...

தாய் இன்றி தரணியில் தனி ஒரு உயிர் இல்லை ,
தாய்மடி மறக்க மாற்று இல்லை ,
மரணம் வரை மனம் சுமக்கும் ,
மறைந்தாலும் , மாறாத அன்பு வெல்லும் ...

இவன்
மகேஸ்வரன். கோ (மகோ )
கோவை -35
+91 -9843812650

எழுதியவர் : மகேஸ்வரன். கோ (மகோ ) (21-Jun-21, 9:42 pm)
சேர்த்தது : மகேஸ்வரன் கோ மகோ
Tanglish : thaay
பார்வை : 136

மேலே