தனிப்பெரும் சக்தி

தவமாய் தவமிருந்து தன்னில் உருவான
தன் பிள்ளை தனை பெற்றெடுக்கும்
தனிப்பெரும் சக்தி தாய் ...

பெண்கள் பொறுமையின் பிறப்பிடம்
தியாகத்தின் திறவுகோல் என்பதாலேயே
புத்திரம் சுமக்கும் உன்னதத்தை பெண்ணுக்கு
இறைவன் கொடுத்தானோ ?...

தன் பிள்ளையின் சிரிப்பே தன் சிரிப்பு
தன் பிள்ளையின் அழுகை தாங்காது
தவித்து போகும் தன்னலமற்ற தெய்வம் தாய் ...

தன்னுயிராய் தன் பிள்ளை தனை பேணி
தரணியில் தன் மகனை தலைநிமிர செய்து
தன்னடக்கமாய் தனித்து நிற்கும் நிகழ்கால
நிதர்சனம் தாய் ...

கடவுள் பூமிக்கு வந்து , பூவுயிர் தன்னை
தாங்கி கொள்ள முடியாது என தன் சார்பாய்
சரியாக செய்து வைத்த சிறப்பு தாய் ...

தாயின்றி தனியாய் எவரும் பிறப்பதில்லை ,
தாய் அல்லாது தனி ஒரு உயிர் செழிப்பதில்லை ,
தாய் அல்லாது தன்னலமற்றதொரு உறவு
தரணியில்லை...

தாய்மையை போற்றாததொருவன்
தன்னலம் சிறந்து வாழ்வதில்லை ...


இவன்
மகேஸ்வரன். கோ (மகோ )
கோவை -35
+91 -9843812650

எழுதியவர் : மகேஸ்வரன். கோ (மகோ ) (21-Jun-21, 9:46 pm)
சேர்த்தது : மகேஸ்வரன் கோ மகோ
பார்வை : 104

மேலே