தாய்மையின் தவம்

கருவுற்றேன் என்று உணர்ந்த நிமிடம்
கடலின் அலையாய் ஆர்பரித்தேன்

வயிற்றில் நீ உதைக்கும் போது
வரம் இது என்றேன்

மரண வலியில் உன்னை பெற்றேடுத்தேன்
மலர்ந்த உன் முகம் பார்க்க ஓடியது என் வலி

சிலிர்த்து போனது என் உடல் உன்
சின்ன புன்னகையில்

உன் பாதம் தரையில் தவழும் போது
உண்மையில் நான் தவழ்ந்தேன் என் மனதில்

கொட்டி கிடக்கும் செல்வம் உன் ஒரு
கொலுசொலிக்கு ஈடாகாது

என்னை தாயாக்கிய
என் தாயே

எழுதியவர் : (23-Jun-21, 1:59 pm)
சேர்த்தது : Selvi krishnan
Tanglish : thaimayin thavam
பார்வை : 300

மேலே