உனக்கான விடுதலை

உனக்கான விடுதலை
எவர் தருவார் என
ஏங்கி தவிக்காதே...

விடுதலை என்பதே
எவரையும் சார்ந்து
இல்லாதிருப்பது என்பதே ...

வீண் சங்கடங்கள் தவிர்த்து,
விழிகள் நிறைக்கும் வலிகள் தவிர்த்து,
தடைகள் தகர்த்து தன்னிலை உணர ,
உள்ளம் விட்டு விலகி
உன்னை கூர் நோக்க
உன் விடுதலை என்பது
உன் வசமே என உணர்வாய்
மனமே...

இவன்
மகேஸ்வரன் .கோ ( மகோ )
+91 -9843812650
கோவை-35

எழுதியவர் : மகேஸ்வரன் .கோ ( மகோ ) (25-Jun-21, 4:48 pm)
சேர்த்தது : மகேஸ்வரன் கோ மகோ
பார்வை : 56

மேலே