பா பாவினம் 2 ஆசிரியப்பா
காரிகைக் குறிப்பு
அகவலோசையோ டளவடித்தாகியும் இயற்சீர் பயின்றும்
அயற்சீர் விரவியும் தன்றளை தழுவியும் பிற தளை
மயங்கியும் நிரைநடுவாகிய வஞ்சியுரிச் சீர்
வருத்தலில்லா ஆசிரியப்பாவினை அடியானுந் தொடை
யானும் ஓசையானும் பொருளானும் பெயர் வேறுபாட்டுணர்த்துவான் எடுத்துக்கொண்டார்
இந்த விதிப்படி ஆசிரிப்பாவில் நான்கு வகையுண்டு
1 .நேரிசை ஆசிரியப்பா
2 .இணைக்குறள் ஆசிரியப்பா
3 .நிலைமண்டில ஆசிரியப்பா
4 . அடிமறி மண்டில ஆசிரியப்பா
ஆசிரியப்பாவிற்கு குறைந்தது மூன்றடிகள் வேண்டும்
அதிகப்படி அடி எல்லை இப்பாவிற்கு இல்லை
நலம்வி சாரிக்குதோ நயனங்கள் இரண்டும்
வலம்இடம் அசைந்திடும் விழிநாடகம் என்னவோ
கலசத்து அமுதவிழிப் பார்வையே
பலம்நீ என்னருகில் நான்வெல்வேன் உலகை !
---இது ஈற்றயலடி முச்சீரால் குறைந்து
ஏனைய நாற்சீர் அளவடியில் அமைந்து வந்த
இது நேரிசை ஆசிரியப்பா
ஈரசை இயற் சீரும் மூவசை சீர்களும் விரவி வந்துள்ளது
தேமாங்கனி சீர் சா //ரிக் /குதோ நேர் நேர் நிரை
புளிமாங்கனி சீர் விழி/ நா/ டகம் நிரை நேர் நிரை
கனிச்சீர்களும் உள்ளன இப்பா அனுமதிக்கும்
நிரை நடுவான கூவிளங்கனி கருவிளங்கனி சீர்களுக்கு இப்பாவில் அனுமதி
இல்லை . வெண்பாவில் கனிச்சீர்களுக்கு முற்றிலும் அனுமதி இல்லை
மேலும் சில பார்ப்போம்
யாப்பார்வலர்களுக்கு உதவக் கூடும்