பா பாவினம் காரிகை

யாப்பு ஆர்வலர்களுக்கு

யாப்பருங்கலக்காரிகை ஒரு சிறந்த யாப்பு இலக்கண
நூல் ந மு வேங்கடநாட்டார் அந்த நூலின் சூத்திரங்களுக்கு புரியும்படி விளக்கக் குறிப்புகள் சிறப்பாகத் தந்திருக்கிறார் அதன்படி ஓரு பாவினதை ஆராய்வோம்
பாவினம் ஆசிரியத்துறை

ந மு வே யின் யாப்புக் குறிப்பு :

சீர் வரையறுத்திலாமையால் எனைத்து சீரானும் அடியானும்
வரப்பெறும் முதலயலடி குறைந்தும் நடுவீரடி குறைந்தும் மிக்கும்
வருவன ஆசிரியத் துறையாம்

வரையொரு கான்யாற்றங் கல்லத ரெமுள்ளி வருதிராயின்
அறையிருள் யாமத் தடுப்புலியே றும்மஞ்சி யகன்றுபோக
நரையுரு மேருநுங் கைவே லஞ்சு நும்மை
வரையா மங்கையர் வௌவுத லஞ்சும் வாரலையே !

----இது நான்கடியாய் ஈற்றயலடி (மூன்றாவது அடி )குறைந்து வந்த
ஆசிரியத்துறை எனும் எடுத்துக்காட்டுப் பாடல்
சீர் வரையறுருத்திலாமையால் எனைத்து சீரானும் அடியானும்
வரப்பெறும் என்ற விதியும் பொருந்துகிறது

படித்துறைப் பாயசம் ஏற்று அருள்வாய்
அடியார் கழிநெடில் துயரினைத் துடைப்பாய்
நெடில்ஆ சிரியத்துறை ஆசானே
படிப்பிப்பாய் பஞ்சமுதப் பாபழனிக் குமரா !

---இது காலையில் நான் பதிந்த கவிதை
ஈற்றயலடி குறைந்து எனைத்து சீரானும் அடியானும்
வரப்பெறும் என்ற விதி இதற்கும் பொருந்துகிறது

மேலும் சில பா வினங்களை காரிகை வழி புரிந்து கொள்வோம்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Jun-21, 6:27 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 23

மேலே