விழித்தவுடன் பார்க்கத் தகாத வஸ்துக்கள் - எண்சீர் ஆசிரிய விருத்தம்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)

ஊனமவத் திரம்பவங்கல் லாடை சங்கை
யூமைதட்டை செவிடிரங்கல் சடைநி ராசை
கூனழுக்கு மேனிவிரி மூர்த்தந் தூக்கங்
குட்டமற நெய்த்தலையா குலமுன் மாதந்
தீனமறற் கயமிவையுள் ளார்மு கத்துந்
தீட்டழுகை விதவைவஞ் சியர்மு கத்துங்
கானவர விந்திபலி மூரி மாறு
கயிறுலக்கை முறத்திடத்தும் விழித்த றீதே

- பதார்த்த குண சிந்தாமணி

அங்க ஈனமுள்ளவர், காவி உடை அணிந்தவர், ஊமை, மொட்டைத் தலை, செவிடு, அழுகை, சடை மனிதரிடத்தில் விருப்பமில்லாதோர்,

கூன் விழுந்தோர், அழுக்கான உடலையுடையவர், தலைமயிரை விரித்திருப்பவர்கள், எப்போதும் தூங்கிக் கொண்டே இருப்பவர்கள், குட்டத்தால் பாதிக்கப்பட்டவர், கொலை செய்தவர், எண்ணெய் பூசிய தலையுள்ளவர்கள், மனநோயுள்ளவர்கள் ,

மயக்க நிலையிலுள்ளவர், வறுமை நோயுள்ளவர், காச நோயுள்ளவர் இவர்கள் முகத்தைப் பார்த்தாலும் தீட்டு, அழுகையுள்ள மாதர் முகத்தைக் கண்டாலும் விதவையைப் பார்த்தாலும்,

பாம்பு, பூனை, சாம்பல், எருமை, விளக்குமாறு, கயிறு, உலக்கை, முறம் ஆகிய பொருட்களைப் பார்த்தாலும் கெடுதியுண்டாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Jun-21, 4:40 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே