விழித்தவுடன் பார்க்கத் தக்க வஸ்துக்கள் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
கஞ்சந்தங் கந்தீபங் கண்ணாடி யெல்லங்கி
செஞ்சந்த நீர்மண் சிவலிங்க - மஞ்சங்கல்
கற்றா தமதுவலக் கைமனைத டாரியிவை
யுற்றால் விழிப்பிலுத்த மம்
- பதார்த்த குண சிந்தாமணி
விழித்தவுடன் தாமரைப்பூ, தங்கம், விளக்கு, கண்ணாடி, சூரியன், புகையில்லா நெருப்பு, செஞ்சந்தனம், கடல், வயல், சிவலிங்கம், மேகம் சூழ்ந்த மலை, பசுவுங் கன்றும், தமது வலக்கை, மனைவி, மிருதங்கம்
இவற்றுள் ஏதேனும் ஒன்றைப் பார்த்தல் நலம் பயக்கும்.