படிப்பிப்பாய் பஞ்சமுதப் பா

படித்துறைப் பாயசம் ஏற்று அருள்வாய்
அடியார் கழிநெடில் துயரினைத் துடைப்பாய்
நெடில்ஆ சிரியத்துறை ஆசானே
படிப்பிப்பாய் பஞ்சமுதப் பாபழனிக் குமரா !

கவிக்குறிப்பு :
படித்துறை --தென்காசிக்கு அருகில் ஆயக்குடி என்று ஒரு சிற்றூர்
அங்குள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் படியில் பாயசம் இட்டு
வணங்கும் ஒரு வழிபாட்டு முறையுண்டு

பஞ்சமுது ----பழனிக் குமரனின் இன்னொரு நிவேதனைப் பொருள்
பஞ்சாமிர்தம்

இந்தப் பாவினம் எது என்பது கவிதை வரிகளில் இருக்கிறது
யாப்பார்வளர் தெரிந்து கொள்ளுங்கள்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Jun-21, 9:12 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 31

மேலே