புத்தாண்டு

அனைவரின்
வாயயும் மூடவைத்தாய்.
அவரவரை வீட்டிலேயே
தங்கவைத்தாய்.
பள்ளி முதல் கோயில்
வரை மூடவைத்தாய்.
மார்ச் முதல்
மாதத்தையே மறக்க
வைத்தாய்.
மாதம் வாங்கும் சம்பளத்தை
குறைக்கவைத்தாய்..
என்னாடா வாழ்க்கையென்று
நினைக்கவைத்தாய்..
இருந்தாலும் எங்களை நீ
வாழவைத்தாய்..
உருமாறும் கோரோனாவை
ஓடி போகச் சொல்லு..
வரப்போகும் நல்லாண்டில்
வாழ்த்துக்கள் சொல்லி செல்லு..

எழுதியவர் : ராம் (26-Jun-21, 7:28 pm)
சேர்த்தது : Ramkumar M
Tanglish : puthandu
பார்வை : 159

மேலே