அறிவே துணை!

#உழைப்பு.......*

முன்னேற்ற மாடிக்கு
செல்ல உதவும்
படிக்கட்டுகள்....

புகழ் கொடி
மக்கள் நாவில் பறந்திட
உதவும் கயிறு....

சாதனை உயரத்தை
அடைய உதவும் ஏணி ....

வறுமையை
உள்ளே விடாமல்
விரட்டி அடிக்கும்
காவல்காரன...

மகிழ்ச்சி துறைமுகத்தை
அடையாளம் காட்டும்
கலங்கரை விளக்கு.....

பணக்காரன் என்னும்
வரத்தைப் பெற
செய்ய வேண்டிய தவம்.....

வாழ்க்கை கரையை
சென்றடைய உதவும்
படகு ......

நிம்மதி தென்றலை
உருவாக்கும் நந்தவனம்.....!

தன்னை நம்பி
வந்தவர்களை
ஒருபோதும் கைவிடாத
கர்ணன்....

*கவிதை ரசிகன்*

நன்றி!

எழுதியவர் : கவிதை ரசிகன் (27-Jun-21, 6:31 pm)
பார்வை : 27

மேலே