வாழ்க்கை வாழ்வதற்கே

வாழ்க்கை ஒரு கடல் , கடல் அலைதனை
அதன் போக்கில் அரவணைத்து
உற்சாகமாய் நீந்த
கடலை கடப்பது எளிதாகும் .

அது போல் தான் வாழ்க்கையும் ,
வாழ்க்கையை அதன் போக்கில் வாழ
பழகி கொண்டால் வாழ்வு வளமாகும் .

உடல் பாகம்தனை உள் சென்று
உருகுலைக்கும் நுண்கிருமி ,
உள்நின்று உபத்திரம் செய்யும்.
பாகம்தனை புறம் தள்ள , உடல் புத்தியுயிர் பெரும் .

பாகம் பறி போகுதே என பதறினால் ,
பற்றி கொண்ட நுண்கிருமி மொத்த
உடலையும் பாலி வாங்கும் .

அதுபோல் உள்நின்று உற்சாகத்தை ,
உறக்கத்தை கலைத்து ,
உன் நிம்மதி தனை கொல்லும்
காயங்களை , கலக்கங்களை புறம் தள்ள ,
வாழ்க்கை வசந்தம் ஆகும்

அகற்றிட அல்லாமல் அழுது புலம்பினால் ,
அது அறக்கம்மின்றி ஆள் கொல்லும் ....

உள்ளம் குலைந்து , உற்சாகம் இழந்து ,
உன்னை காயம் செய்து கலங்க வைத்ததை
நினைத்து உன் வாழ்வை தொலைக்காதே ...

காலங்கள் மாறும் , காட்சிகளும் மாறும் ,
காட்சி மாறும் போது காலம் சுழற்சி
கொண்டு கடந்த காலத்தை
களித்திருக்க கையில் தராது .

வாழ்க்கை தரும் வலி தன்னை வாஞ்சையாய்
வாரி அணைத்துக்கொள்ள ,
அதன்பால் ஆட்கொண்ட காயம்
அதனை கட்டி அணைக்க ,
ஆழ்மனதை ஆட்டுவித்த ஆரா ரணம்
அதனை ஆசையாய் அரவணைக்க ..
அது தன்னையும் , தந்தவனையும்
தடி கொண்டு தாக்கி தறிகெட்டு ஓட வைக்கும் ...


உழைப்பவனுக்கு வியர்வை ஒன்றும் புதிதில்லை ..
ஓடுபவனுக்கு தூரம் என்றும் பயமில்லை ...
நீந்த தெரிந்தவனுக்கு கடல் ஒன்றும் ஆழம் இல்லை ...
புன்னகை பூப்பவனுக்கு புண்கள் என்றும் வலி இல்லை ...
வாழ தெரிந்தவனுக்கு வலிகள் என்றும் தடை இல்லை ...

வலிகளை பார்த்து சிரிக்க பழகு ,
எது வந்தாலும் , எவர் தடுத்தாலும் எதிர்த்து சிரி ...
உற்சாகமாய் , உத்வேகமாய் உன்வாழ்வை உனதாய் வாழு ,
உனக்கான கதவு திறக்கும் , அது முன்பு எப்போதும் இருந்ததை விட ,
உண்மையான இன்பத்தை தரும் ...

நான் ஒன்றும் முனிவன் இல்லை ,
முதுமைக்கு முன் போனவன் இல்லை ,
ஆழ்மனது ஆர்ப்பரிக்க , அடிபட்டு , அழுது , புலம்பி
புற்றாய் புண் பட்டு , புதையுண்டு போய் விட நினைத்து ,
புதிதாய் புத்துயிர் பெற்று , புன்னகைத்து வாழும் ஆண் .

அது போல அன்பு தோழமை அவர் தம் அகம் மகிழ்ந்து ,
ஆர்பரிப்பை , ஆசையுடன் வாழ அரவணைப்பாய் இல்லை ,
அன்பாய் இல்லை , ஆரம்பமாய் இருக்கவே இது .

என்றும் அன்புடன்
இவன்
மகேஸ்வரன். கோ (மகோ)
+91-9843812650
கோவை-35

எழுதியவர் : மகேஸ்வரன். கோ (மகோ) (19-Jun-21, 11:15 am)
சேர்த்தது : மகேஸ்வரன் கோ மகோ
பார்வை : 204

மேலே