எது கொடுப்பினை
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் சில கொடுப்பினைகள் இருக்கும், அதனுடன் பல படிப்பினைகளும் இருக்கும்!
படிப்பினைகள் ஒருவரின் வாழ்க்கை தரத்தையும், வாழ்க்கைப் போக்கையும் மாற்றி அமைக்கும் வல்லமை படைத்தது!
நல்ல ஒரு குடும்பத்தில் பிறந்து, சிறந்த பண்புகளையும் உயர்ந்த படிப்பினையும் பெறுவது அருமையான ஒரு கொடுப்பினை!
நல்ல உத்தியோகமும் நல்ல வாழ்க்கைத் துணையையும் கிடைக்கப் பெறுவது பாக்கியமானதொரு சிறந்த கொடுப்பினை!
ஒழுக்கம், அறிவு நிறைந்த பிள்ளைகளைப் பெற்றெடுப்பது நிச்சயமாக மனதிருப்தி தரும் ஒரு உயரிய கொடுப்பினை!
நம்முடைய பலவீனத்தை அறிந்து, உணர்ந்து நம்முடன் இனிய நட்பு கொண்ட நண்பர்கள் வாய்ப்பின், நிச்சயமாக அது கொடுப்பினை!
நம் வார்த்தைகளால், செயல்களால், உதவியால் ஒரு சில பேருக்காவது நன்மை விளைந்தால், அது சிறந்த கொடுப்பினை!
ஊதிய ஓய்வு பெறுவதற்குள் பிள்ளகள் திருமணம் முடித்தால், அது உண்மையாக நிம்மதி தரும் நல்ல கொடுப்பினை!
பதவி ஓய்வு பெற்ற பிறகு, பிறர் பொருளுதவியை நாடாமல் ஆரோக்கியமாக வாழ்வது மிக மிகப் பெரிய கொடுப்பினை!
ஒவ்வொரு நாளும் இரவில், தூக்கத் தடை ஏதும் இல்லாமல் , அமைதியாக உறங்குவது அத்தனையிலும் சிறந்த கொடுப்பினை!
ஆனந்த ராம்