அஞ்சிறைப் பெண்ணே
அஞ்சிறைப் பெண்ணே
அஞ்சுகப்பெண்ணே;
அழகியப் பெண்ணே;
வஞ்சரக் கண்ணே;
வஞ்சகக் கண்ணே;
வாட்டும் வதனமே;
வீழ்த்திய புருவமே;
விடைத்த பருவமே;
வதைத்த தேகமே;
வரைந்த ஓவியமே;
தீட்டிய விழியால் தீண்டிவிட்டாய்;
தீயில் விழுந்த புழுவாய்;
துடிக்கவிட்டாய்;
தேடியும் தேடியும்,
தவிக்கவிட்டாய்;
தெரியாது தெரியாது என்றே நடித்துவிட்டாய்;
வடித்த நிலவாய் வாய்பேசாது இருந்து விட்டாய்;
நெஞ்சகத்தில் இத்தனை
வாஞ்சையோ;
வஞ்சகமோ,
தஞ்சம் புகுந்தும்,
தடுமாற்றம் ஏனோ,
வஞ்சியுன் இதழ்கள் கெஞ்சியும்,
மிஞ்சிப்போவதென்ன;
நினைவுகளும் ,
நஞ்சிப்போனதென்ன;
நெஞ்சைப் பிளந்தவளே!
நெருங்கியேவந்தே,
நெருப்பாய் அனலைக் கக்கியவளே;
சிக்கிய கரங்கள் இருக்க;
சிதறிய முத்தாய் பதறுமுன் ;
உதறிய வெட்கம் இருக்க;
உதவ நான் இருக்க;
ஒயிலாக தேகம் இருக்க;
ஓடியதேன்.
தஞ்சம் தான் ஆனேனே;
வஞ்சனை எதற்கு;
பஞ்சம் இல்லாது பருகிடத்தந்தால்;
பசிக்கு ருசியாகுமே;
அஞ்சிட வதைத்தவளே;
மிஞ்சிட வைத்தவளே;
கொஞ்சிடும் கிளியே;
கெஞ்சிடும் கண்ணில்;
கேட்காது சிறைவைத்ததும் ஏனோ!
பஞ்சி மேனியில்;
பத்திட ஆசை இருக்க;
படித்திட வராதது ஏனோ;
படுத்திய நிலவோ;
பதித்தது உறவோ;
விதித்தது தடையோ;
விடுத்தது விடுப்போ;
தடுத்தது இடுப்பா;
துடித்தது தேகமோ;
தொடுத்தது மோகமோ;
வடித்தது வானமோ;
வஞ்சியின் நாணமோ;
வசிகரக் கண்ணால்;
வஞ்சித்ததும் ஏனோ;
வஞ்சி நீ வந்தும் வராதது ஏனோ;
தந்தும் தறாதது ஏனோ;
கொஞ்சிய விழிகள்;
கோபம் கொண்டதும் ஏனோ;
நெஞ்சில் சோகத்தைத் தழுவிட;
விஞ்சித்தும் ஏனோ;
கொஞ்சிட்ட விரல்கள்
கெஞ்சிட வைத்து
பிஞ்சது இதழும்.
பஞ்சது மனது;
பிசைந்ததுபோதும்;
வடித்தது போதும்;
அஞ்சனமாய் தீட்டிடவா;
சந்தனமாய் அப்பிவிடவா;
பிடித்திடவே வா;
பாலாடையே வா;
பருவே வா;
விழிகள் தள்ளாட;
பிஞ்சியுடல் பஞ்சாக;
துஞ்சியதும் ஏனோ;
பிறை நுதழி சேழ்கண் விழியாளே;
பிறையன் செய்த பிழையேதோ.
கட்டுக்கு அடங்காது;
காட்டிட முடியாது;
கட்டழகிழே நம் காதலை.
யாயும் ஞாயும் யாராகியும்;
எந்தையும் நுந்தையும் ;
எவராயினும்; நானும் நீயும் எங்கிருந்தாளும்;
நதியோடு; பிரண்ட மண்ணாய்;
மண்ணோடு கலந்த நீராய்;
மடியோடு சேர்ந்த துணியாய்;
இடியோடு சேர்ந்த மழையாய்;
மழையோடு ஓடிய ஒடையாய்;
அன்புடன் கலந்த நெஞ்சே.,
அரையன் அவதித்தான் படவேண்டுமோ,
வந்துவிடு வதைத்ததுபோதும்.
வாழந்திடுவோம்;
விழியுடன் ஆயிரம் கவிபாடி.
அஞ்சிரப்பெண்ணே;
அஞ்சுகக்கண்ணே;
சிறகடித்து வா;
சிரித்ததுபோதும்;
சிறியது காலம்;
சிறையிட்டது போதும்.
சிதைத்தது போதும் மனதை;
கற்பனைச் சிறகுகள் விரித்ததுபோதும்;
காந்தல் விழிகள் துடித்ததுபோதும்;
உன்வதை போதும்;
உயிர்ப்பிக்க வா;
சிலையானது மனது;
சீழ்பிடிக்கும் வயது;
சீக்கிரம் வா;
சிதைத்திடவா;
வதைத்தது போதும்;
அஞ்சிறைப் பெண்ணே