பூ போல போது குலுங்குங்க

செம்பருத்தியைக் கண்டால் பக்தி பொங்கும்
உங்கள் வீட்டில் என்றும் பக்தி பொங்கட்டும்!

பவழமல்லி கண்களுக்கு மிகவும் குதூகலம்
உங்களின் மனமும் தினம் குதூகலிக்கட்டும்!

சாமந்திப்பூ பூஜை அறையை அலங்கரிக்கும்
அன்பு உங்களின் மனதை அலங்கரிக்கட்டும்!

அரளிமலர்களைச் சேர்த்தா அழகான மாலை
காலை மாலை தெய்வத்திற்கு போடுங்க மாலை

ரோஜா பூவைப் பார்த்தா ஆசை அதிகரிக்கும்
ஒருவர் மற்றவருடன் ஆசையா இருந்திடுங்க

மல்லிகைப் பூவின் மணம் மனதைக் கவரும்
வீட்டு ரசத்தின் மணம் பசியைக் கிளறும்!

மணம் இல்லாதபோதும் கனகாம்பரம் அழகு
பணம் இருப்பினும் பணிவு இருப்பின் அழகு

குறிஞ்சி 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும்
நீங்க தினம் 12 தடவையாவது நல்லா சிரிங்க

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (28-Jun-21, 10:32 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 90

மேலே