கதகதப்பு♥️♥️
கதகதப்பு♥️♥️
மார்கழி குளிரினிலே
தந்தி அடிக்கும் வாய்களுக்கு
தார்மீக பொறுப்பேற்று
தயங்காமல் தர வேண்டும்
ஒரு நீண்ட முத்தம்
மஞ்சத்திலே தஞ்சம் அடைந்து
கஞ்சமே இல்லாமல்
கட்டித்தழுவி விட வேண்டும்
வாட்டி எடுத்த குளிர்
வாலிப விளையாட்டால்
விரட்டி அடிக்க வேண்டும்.
கதகதப்பு அதிகரிக்க
காதல் கிளிகள்
காம லீலைகள் ஆர்பரித்து
அரங்கேற்ற
மயங்கிய மான் விழி
தேன் சுவை இதழ் வழி
மது ரசம் இடை வழி
உள்ளங்கள் தேடிய உயிர் வழி
உல்லாசம் உலகின்
உயரிய வழி.
- பாலு.