சத்தமில்லாமல் ஒரு சம்பவம்♥️♥️

சத்தமில்லாமல் ஒரு சம்பவம்♥️♥️

வறண்ட பூமியாய்
வெடித்த இதழ் வரிகள்.
பாலைவன சூட்டில்
தீ சுவாலை என பற்றி எரிய
தவித்த உதடுக்கு
உதவிக்கரம் நீட்ட
உவமைக்கும்
உதாரணத்துக்கும்
உள் அடங்கா
உன்னதம்
அவள் வருவாளா!
வந்து இதழ் வைத்தயம்
புரிவாளா!
புன்னைகை சிந்தும்
பூவை
உதட்டோர சிரிப்பில்
பூ வானம் தூவினாள்.
செவ்வான இதழாள்
சிகப்புக்கு சவால் விட்டாள்.
ஆரஞ்சு சுளை இரண்டை
அடுக்கி வைத்து
ஆரவாரம் இல்லாமல்
அருகில் வந்தாள்.
பஞ்சு மெத்தைகளால்
உலர்ந்த திராட்சைகளுக்கு
ஒத்தடம் தந்தாள்.
காய்ந்த நிலத்தில்
மழை துளிகள் சிந்த,
காதல் காற்று பலமாக வீச,
சங்கமித்த நான்கு
மாதுளையும்
முத்த மழையில் நனைந்தது.
பஞ்சத்தில் அடிப்பட்டவன்
பஞ்சு மிட்டாய் இனிப்பை
பாங்காய் சுவைத்தான்.
தேனில் கலந்த பலாச்சுளயை
தெகட்டாமல் ருசித்தான்.
மலரில் அமர்ந்த பட்டாம் பூச்சி
பறக்காமல் நிலைத்து நிற்க....
அசையாமல் ஆடாமல் மலரும்
துவளாமல் இடம் கொடுக்க.....
இதழ் வரிகளில்
எழுத ஆரம்பித்த
இதய கவிதை
காவியமாக
விஸ்வரூபம் எடுத்தது.....
- பாலு

எழுதியவர் : பாலு (28-Jun-21, 9:55 pm)
சேர்த்தது : balu
பார்வை : 204

மேலே