நீ மட்டும்....

*✍️கவிதை ரசிகன்* படைப்பு...

பெண்ணே!
உன்னையே!
பார்த்துக் கொண்டிருந்தால்
நான்
இமைப்பதையும்
வென்றிடுவேன்...

உன்னோடே!
உரையாடிக் கொண்டிருந்தால்
நான்
உறக்கத்தையும்
வென்றிடுவேன் !

உன் மடியிலேயே!
படுத்துக் கொண்டிருந்தால்
நான்
பசியையும்
வென்றிடுவேன் !

உன் தோளிலேயே
சாய்ந்து கொண்டிருந்தால்
நான்
கவலையையும்
வென்றிடுவேன்

உன்னோடே!
நடந்துகொண்டிருந்தால்
நான்
தாகத்தையும் வென்றிடுவேன்....

உன்னையே!
மனைவியாக அடைந்துவிட்டால்.... நான்
உலகத்தையே
வென்றிடுவேன்...!!!

*கவிதை ரசிகன*


நன்றி!

எழுதியவர் : கவிதை ரசிகன் (28-Jun-21, 8:40 pm)
பார்வை : 125

மேலே