நம்மில் பலரிடம் இருக்கிறது பெரிய ஏக்கம்

நம்மில் பலரிடம் இருக்கிறது பெரிய ஏக்கம்
அது, சரியான டிமிக்கி கொடுக்கும் தூக்கம்!
ஒரு நாள் போல் ஒரு நாள் இருப்பதில்லை
தூக்கம் சரியில்லையேல் திருப்தி இல்லை
குறைவான தூக்கம் என்றாலும் தொல்லை!
உடலுக்கு தகுந்த உழைப்பில் வரும் களைப்பு
மனதிற்கு தகுந்த சிந்தனைகள் தரும் களிப்பு
இரண்டில் ஒன்று ஏதாவது சதி செய்து விடும்
விளைவு, தூக்கம் ஒரு ஆட்டம் கண்டு விடும்!
சரியான நேரத்தில் சரியான ஆகாரம் தின்று
மனதையும் அல்லாடாமல் வைத்தால் நன்று!
நல்லுறக்கம் அமைய வழி காண்போம் இன்று!

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (28-Jun-21, 10:43 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 547

மேலே