தருமம் மிகவும் உயர்வான கருமம்

அன்பு கருணை பாசம் நல்லெண்ணம் எல்லாமே நல்ல குணங்கள்
ஆனாலும், பிறர்க்கு உதவும் செயல்கள், இனிய பூவின் மணங்கள்

அறிவு ஆற்றல் நன்னடத்தை ஒழுக்கம் அனைத்தும் வெகு சிறப்பு
இருப்பினும், தன்னனல்மில்லாத சேவை, தெய்வீகத்தின் வரப்பு

கற்றுத் தருதல், அறிவுரை இவை யாவும் கூட்டிடும் நல்ல கருமம்
ஆயினும், பசியுடன் இருப்பவருக்கு உணவு தருதல் பெரும் தருமம்

வீட்டில் உள்ளவர்க்கு உடைகள் எடுப்பது குடும்பத்தலைவன் அழகு
அனாதை குழந்தைகளுக்கு உடை எடுத்து கொடுப்பது பெரும் அழகு

வீட்டில் உள்ள முதியவரை கண்கலங்காமல் கவனிப்பது கடமை
முதியோர் இல்லத்திற்கு முடிந்த தொகை கொடுப்பது கருணை

திருமணங்களுக்கு சென்று விருந்து உண்ணுதல் நல்ல போகம்
ஏழைக்கு உணவு வழங்கி, சேர்ந்து உண்ணுதல் கருணை ராகம்

மனைவி தலையில் சூடி மகிழ பூக்கள் வாங்கி தருவது அன்பு
இறைவனுக்கு சூட்ட பூமாலையுடன் கோவில் செல்வது பக்தி

வாழ்க்கைக்கு மனைவி தேவை இறைவனும் தேவை தான்
பொருள் தேவை, கொஞ்சம் கொடுப்பது உயர்ந்த சேவையே

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (29-Jun-21, 1:28 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 29

மேலே