இரண்டு

ஒன்னும் ஒன்னும் ரெண்டு
நியும் நானும் ஒன்று
கண்ணும் கண்ணும் நாலு
பார்வை மட்டும் ஒன்று
மனசும் மனசும் வேற
நினைப்பது எல்லாம் ஒன்று
பேசும் இதயம் இரண்டு
காதல் மொழி பேசும் மொழி ஒன்று
இதழும் இதழும் இரண்டு
முத்தம் கொடுப்பது ஒன்று
கைகள் இருப்பது நாலு
அணைப்பது மட்டும் இரண்டு
காதுகள் நாலு
கேட்பது ஒன்று
கொடுப்பது ஒன்று
பெறுவது ஒன்று
ஓவியம் ஒன்று
கவிஞனின் சிந்தனை பல

எழுதியவர் : மு.ரவிச்சந்திரன் (30-Jun-21, 1:21 pm)
சேர்த்தது : M RAVICHANDRAN
Tanglish : irandu
பார்வை : 61

மேலே