எவற்றை இழப்பினும்
ஒழுகிசை அகவல் ஓசை உடைய
நிலைமண்டில ஆசிரியப்பா
கல்வியைக் கறறிடின் உலகையும் அறியலாம்
பணத்தினை ஈட்டலாம் கணித்து வாழலாம்
பிணியினை அறிந்திட பெரியதாய் தேடலாம்
பெரியதாய் வாழ்ந்தோர் வாழ்வினை அறியலாம்
பிறந்ததின் பலனையும் தேடியே காணலாம்
பிறரின் மனதினை எளிதில் அறியலாம்
பிள்ளையை வளர்த்திட பெரியதாய் முயலலாம்
கள்ளமாய் உள்ளோர் செயலையும் அறியலாம்
கற்றோர் கல்வியால் இமயமாய் உயரலாம்
பெற்றோர் உற்றோர் ஏளனப் பேச்சையும்
ஏணியாய் மாற்றியே இலக்கை அடையலாம்
புனைவாய் உள்ளதின் உண்மையை தேடலாம்
மெய்யென உலாவிடும் பலகதை களையலாம்
இந்நிலை அடையவே கல்வியே கதிரவன்
பள்ளியுள் சென்றால் நல்வழி கிட்டுமே
எவற்றை இழப்பினும் கல்வியை கற்றிடு
கடுமையாய் உழைத்தால் எல்லாம் கிட்டுமே.
------நன்னாடன்.