விரைந்து எழு

விழுந்த இலைகள்
உரமாகும்!

விழுந்த அலைகள்
மீண்டும் எழும்!

விழுந்த மழைத் துளிகள்
மீண்டும் மேகம் ஆகும்!

விழுந்த விதைகள்
மீண்டும் விருட்சமாகும்!

உழைத்த உழைப்புகள்
ஒருநாள் உன்னதம் கொடுக்கும்!

விழுந்தால்
அழுவதை விடுத்து
எழுவதை முடுக்கு!

எழுதியவர் : கவிஞர் புஷ்பா குமார் (7-Jul-21, 8:13 pm)
சேர்த்தது : மு குமார்
Tanglish : virainthu elu
பார்வை : 1019

மேலே