தாலாட்டு
என் இதயத்தில்
இருந்து கொண்டு
நீ தாலாட்டு பாடினாலும்
நான் மெதுவாக உறங்குவதற்கு
முயற்சி செய்கிறேன் ..!!
ஆனாலும்...
உன் மடியில்
தலை வைத்து உறங்கியே
பழக்கப்பட்ட என் விழிகள்
நீ இல்லாமல்
உறக்கம் கொள்ள
மறுக்கின்றது...!!
--கோவை சுபா